• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • Bigg Boss Tamil 5: நேரடியாக மோதிக்கொள்ளும் இமான் அண்ணாச்சி - பிரியங்கா!

Bigg Boss Tamil 5: நேரடியாக மோதிக்கொள்ளும் இமான் அண்ணாச்சி - பிரியங்கா!

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் நெருப்பு வாரம் இருந்தது போல இந்த வாரம் பஞ்சபூதங்களில் ஒன்றான 'நிலம் வாரம்' என அறிவிக்கப்பட்டு உள்ளது.

 • Share this:
  பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் நமீதா மாரிமுத்து தனிப்பட்ட காரணங்களுக்காக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து நாடியா, அபிஷேக் அடுத்தடுத்த வாரங்களில் வெளியேறிய நிலையில் நேற்று சின்ன பொண்ணு வெளியேற்றப்பட்டுள்ளார்.

  தற்போது இசைவாணி, ராஜு, மதுமிதா, பிரியங்கா, அபினய் வாடி, பாவனி, வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி, நிரூப் ஆகிய 14 போட்டியாளர்கள் உள்ளனர். கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எண்ணற்ற பிரச்சனைகள் குறித்து கமல் விவாதித்தார். அதில் தாமரை, பாவ்னி மற்றும் ஸ்ருதி இடையே இருந்த பிரச்னை குறித்து முதலில் விவாதிக்கப்பட்டது. அப்போது உடை மாற்றும் அறையில் சென்று நாணயத்தை திருடியது தவறு, எனினும் ஸ்ருதி மன்னிப்பு கேட்டுவிட்டதால் அவரை மன்னிக்கும்படி கமல், தாமரைக்கு அறிவுறுத்தினார். மேலும் ராஜு உள்ளிட்ட ஒரு சில போட்டியாளர்கள் தாமரையை காப்பாற்ற விளையாடுவதாக சொல்வது எல்லாம் கேம் இல்லை. நீங்க அன்பு, பாசத்தை வளர்க்க இங்கு வரவில்லை. இது கேம் ஒரு நபர் தான் ஜெயிக்க முடியும் என போட்டியாளர்களுக்கு அட்வைஸ் செய்தார்.

  மேலும் ஸ்ருதியின் உடை குறித்து தாமரை பேசிய விவாகாரத்தில் ஆடை அணிவது அவரவர் சுதந்திரம் என கமல் கூறினார். பின்னர் தாமரை நிகழ்ச்சியினை புரிந்துகொண்டு விளையாட வேண்டும் என கமல் அறிவுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து மதுமிதா தற்போது நன்கு தமிழ் பேசுவதாக பாராட்டிய கமல், இசைவாணி நடவடிக்கை குறித்து விளக்கினார். அப்போது அதிகாரம் என்பது ஒரே இடத்தில் குவியலாக இருக்க கூடாது, மதுமிதாவிடம் ஆலோசித்து வீட்டை வழி நடத்தி இருக்கலாம் என தெரிவித்தார். ஒருவழியாக அனைத்து பிரச்சனைகளும் முடித்து வைக்கப்பட்டாலும், இன்று மீண்டும் பிரச்சனைகள் தலை தூக்குவது இன்று வெளியான இரண்டு ப்ரோமோக்கள் மூலம் உறுதியாகியுள்ளது.

  இரண்டாவது ப்ரோமோவில், தாமரை மற்றும் இமான் அண்ணாச்சி இடையே பிரச்னை ஏற்படுகிறது. அதில், நீ எப்படி டா உள்ளே போன? என்று யாரும் பேசக்கூடாது என கூறும் இமான், எனக்கு பிரியங்கா மீது வருத்தம் என்கிறார். நான் உள்ளே சென்று விட்டேன் எனக்கு தண்டனை கொடுத்தால் வாங்கிக்கொள்கிறேன் என இமான் கூறுவதாக சிபி விளக்குகிறார். அப்போது இமான், நான் தெரிந்தோ தெரியாமலோ உள்ளே சென்று விட்டேன் அதனை ஏன் ரூல்ஸ் பிரேக் என்கிறீர்கள்? என கேள்வி எழுப்புகிறார். அதற்கு பிரியங்கா இது ரூல் பிரேக் தான் என மீண்டும் கூறுகிறார். அதற்கு அண்ணாச்சி பிரியங்கா இப்படி பேசுவதால் ஏதாவது பிரச்சனையை உருவாக்க பேசுகிறாரா? என தோன்றுகிறது என கூறும் காட்சிகள் உள்ளது.  பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் நெருப்பு வாரம் இருந்தது போல இந்த வாரம் பஞ்சபூதங்களில் ஒன்றான 'நிலம் வாரம்' என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதனால் நிலம் காயின் வைத்திருக்கும் நிரூப் கட்டுப்பாட்டில் தான் இனி படுக்கை அறை இருக்கப்போகிறது. எனவே இமான் படுக்கை அறைக்கு நிரூப் அனுமதியின்றி சென்றிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த விவரம் இன்றையை நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Shalini C
  First published: