Home /News /entertainment /

விறுவிறுப்பாக நடக்கும் டாஸ்க்... வெற்றிக்கொடி நாட்டப்போவது யார்?

விறுவிறுப்பாக நடக்கும் டாஸ்க்... வெற்றிக்கொடி நாட்டப்போவது யார்?

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் பாவனி, இமான், தாமரை ஒன்றாக மோதிக்கொள்ளும் காட்சிகளும் உள்ளது.

    பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் இதுவரை நமீதா, நாடியா, அபிஷேக், சின்ன பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, ஐக்கி ஆகியோர் வெளியேறியுள்ளனர். மேலும் வைல்டு கார்டு எண்ட்ரியாக மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த அபிஷேக் கடந்த வாரம் இரண்டாவது முறையாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

    தற்போது சிபி, ராஜு, இமான் அண்ணாச்சி, வருண், நிரூப், அமீர், சஞ்சீவ், அபினய், பாவ்னி, பிரியங்கா, அக்ஷரா, தாமரை என 12 போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் தாமரை, சிபி, அபினய், நிரூப், அக்ஷ்ரா, அமீர், இமான் ஆகியோர் இந்தவார நாமினேஷன் லிஸ்டில் உள்ளனர். இவர்களில் அபினய் அல்லது நிரூப் இந்த வாரம் வெளியேற வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும் தனது நாணயத்தின் பவரை பயன்படுத்தி இந்தவார தலைவராக பாவ்னி இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் தினமும் ஒரு டாஸ்க் வழங்கப்படுவது வழக்கம். இன்றும் ஒரு புதிய டாஸ்க் வழங்கப்படுவது இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் தெரிகிறது. அதில், டாஸ்கை வாசிக்கும் ராஜு இந்த வீடு இதுவரை எவ்வளவோ பிரச்சனைகளை பார்த்திருகிறது.

    பிரச்னையை பிரச்சாரமாக மாற்றி பார்த்திருக்கிறதா? உங்கள் பலவீனங்களை பலமாக மாற்ற தயார் ஆகுங்கள், ஏனென்றால் இன்றுமுதல் இந்த பிக் பாஸ் வீடு அரசியல் மாநாடாக மாற போகிறது ஹவுஸ் மேட்ஸ் மூன்று குழுக்களாக பிரிந்து மூன்று கட்சிகளை உருவாக்க வேண்டும் என கூறுகிறார். அதில் நிரூப், அக்ஷ்ரா, சிபி ஒரு குழு என சஞ்சீவ் கூற, அதற்கு அக்ஷ்ரா, நான் உங்கள் அணியில் இருக்கிறேன் என கூறும் காட்சிகள் இருந்தது. மேலும் இந்த டாஸ்கில் ஆண்கள் அனைவரும் வெள்ளை வேஷ்டி, சட்டை அணிந்து இருப்பது அன்சீன் வீடியோக்களில் உள்ளது.

    இந்தநிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், "வெற்றிக்கொடி கட்டு" என்ற டாஸ்க் வழங்கப்படுகிறது. அதில் கார்டன் ஏரியாவில் கொடிகள் நடுவதற்கு இரண்டு தளங்கள் அமைக்கப்பட்டிருக்கும்
    எந்த இரண்டு நபர்கள் தங்கள் கட்சிக்கான இரண்டு கொடிகளை நடுகிறார்களோ அவர்களது அணிக்கு ஒரு மதிப்பெண் வழங்கப்படும். இறுதியில் எந்த அணி அதிக மதிப்பெண்கள் வாங்குகிறதோ அந்த அணி தான் வெற்றி பெற்றது என பிக் பாஸ் அறிவிக்கிறார்.



    இந்த டாஸ்கில் ராஜு, தாமரை, நிரூப் , சிபி ஒரு அணியாகவும் சஞ்சீவ், இமான், வருண், அக்ஷ்ரா ஒரு அணியாகவும், அபினய், பிரியங்கா, அமீர், பாவ்னி ஒரு அணியாகவும் பிரிந்துள்ளது ப்ரோமோவில் தெரிகிறது. மேலும் பாவனி, இமான், தாமரை ஒன்றாக மோதிக்கொள்ளும் காட்சிகளும் உள்ளது. இதனால் இன்று சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil 5

    அடுத்த செய்தி