• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5: பிரியங்காவாக மாறிய ராஜு... கோபித்துக் கொண்ட பாவனி

Bigg Boss Tamil 5: பிரியங்காவாக மாறிய ராஜு... கோபித்துக் கொண்ட பாவனி

பிக் பாஸ் தமிழ் 5

பிக் பாஸ் தமிழ் 5

பிக் பாஸில் ‘உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி டாஸ்க்’ தொடர்கிறது. ஆனால் நேற்றிருந்த ஜோடிகள் அனைத்தும் இன்று மாற்றப்பட்டுள்ளன.

  • Share this:
    பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் இரண்டாவது சீசனில், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

    இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா, பாடகி சின்னப்பொண்ணு, சுருதி ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை, போட்டியாளர் மதுமிதா, பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

    இன்றும் ‘உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி டாஸ்க்’ தொடர்கிறது. ஆனால் நேற்றிருந்த ஜோடிகள் அனைத்தும் இன்று மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, அபினய் சிபியின் கண்ணாடியாகவும், இமான் ஐக்கியின் கண்ணாடியாகவும், வருண் நிரூப்பின் கண்ணாடியாகவும், ராஜு பிரியங்காவின் கண்ணாடியாகவும் பிரதிபலிக்க வேண்டும் என பிக் பாஸிடமிருந்து உத்தரவு வருகிறது.



    ஆகையால் அனைவரும் தங்களுக்குக் கொடுத்த டாஸ்க்கை செய்து முடிக்க முனைப்பு காட்டி வரும் வேளையில், ராஜுவுக்கும், பாவனிக்கும் கருத்து வேற்றுமை ஏற்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: