• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss: தீபாவளியால் முக்கிய மாற்றம் - இந்த வார நாமினேஷனில் நடக்கும் ட்விஸ்ட்!

Bigg Boss: தீபாவளியால் முக்கிய மாற்றம் - இந்த வார நாமினேஷனில் நடக்கும் ட்விஸ்ட்!

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

இன்று திங்கட்கிழமை என்பதால், நாமினேஷன் நடைபெறும், யாரெல்லாம் நாமினேஷன் லிஸ்டில் வருவார்கள்

  • Share this:
    பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் கோலாகலமாக தொடங்கியது. பிக் பாஸ் சீசன் 5ல் நமீதா மாரிமுத்து, இசைவாணி, ராஜு, மதுமிதா, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, வருண், இமான் அண்ணாச்சி, அபிஷேக், ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி, நாடியா, நிரூப் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் திருநங்கை நமீதா மாரிமுத்து தனிப்பட்ட காரணங்களுக்காக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து நாடியா, அபிஷேக் அடுத்தடுத்த வாரங்களில் வெளியேறினர். கடந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் சின்ன பொண்ணு வெளியேற்றப்பட்டுள்ளார்.

    இந்த நிகழ்ச்சியில் தற்போது ஆகிய 14 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த சீசன் ஆரம்பத்தில் சற்று போரிங்காக சென்ற நிலையில், தற்போது கலகலப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதனிடையே தீபாவளி அன்று ஒளிபரப்பாகவுள்ள எபிசோட் தொடர்ந்து 4 மணி நேரம் ஒளிபரப்பாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இரவு 7 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகும் என கூறப்பட்டுள்ளது. இந்த சிறப்பு நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீடு களைகட்டும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் பல்வேறு ஜாலியான டாஸ்க்குகளும் கொடுப்பார்கள் என்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

    இந்தநிலையில் இன்று திங்கட்கிழமை என்பதால், நாமினேஷன் நடைபெறும், யாரெல்லாம் நாமினேஷன் லிஸ்டில் வருவார்கள் என்ற எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில், தீபாவளியை முன்னிட்டு வித்தியாசமான முறையில் நாமினேஷன் நடைபெறுவது இன்று வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் தெரிகிறது. அதில், ஒவ்வொரு போட்டியாளர்களின் புகைப்படமும் ஒரு பெரிய ராக்கெட் வெடியில் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் வீட்டில் உள்ள இரண்டு போட்டியாளர்களை இந்த வார எவிக்ஷனில் இருந்து காப்பாற்றலாம் என பிக் பாஸ் அறிவிக்கிறார்.

    முதலில் வரும் இமான், இதுகுறித்து கேள்வி எழுப்பும் நிலையில், "எந்த இரண்டு நபர்கள் வெளியேறாமல் இருக்க வேண்டும் என நீங்கள் ஆசைப்படுகிறீர்களோ அவர்களை காப்பாற்றலாம்" என மீண்டும் பிக் பாஸ் கூறுகிறார். இதனை தொடர்ந்து ஸ்ருதி, தாமரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருப்பது மிகவும் முக்கியமானது என எனக்கு தோன்றுகிறது என கூறி தாமரை இருக்கும் ராக்கெட் வெடியை பற்ற வைக்கிறார். அக்ஷரா, தாமரை மற்றும் ஐக்கியை காப்பாற்றுகிறார். பின்னர் வரும் மதுமிதா, பிரியங்காவை சிலர் தவறாக புரிந்து வைத்துள்ளனர் என கூறி அவரை காப்பாற்ற விரும்புவதாக கூறுகிறார்.



    இதனை தொடர்ந்து வரும் பிரியங்கா, தீபாவளி வாழ்த்துக்கள் கூறிவாறு மதுமிதா மற்றும் இசைவாணியை காப்பாற்றுவது தெரிகிறது. கடந்த வாரம் முழுவதும் தாமரை - ஸ்ருதி இடையே பிரச்னை இருந்த நிலையில், ஸ்ருதி, தாமரையை காப்பாற்ற நினைப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த முழு விவரமும் இன்றையை நிகழ்ச்சியில் வரும் என்பதால், யாரெல்லாம் காப்பாற்றப்படுகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: