Home /News /entertainment /

பவானியை லவ் பண்றீங்களா? ராஜுவின் கேள்வியால் ஷாக்கான அபிநய்

பவானியை லவ் பண்றீங்களா? ராஜுவின் கேள்வியால் ஷாக்கான அபிநய்

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

ராஜு, பவானியை லவ் பண்றீங்களா" என்று கேட்க, அந்த கேள்வியால் ஷாக்கான அபிநய் ‘ஏய்! என்னடா கேக்குற’ என்று அதிர்ச்சியுடன் பார்க்கிறார்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் 54-ம் நாளான இன்று வெளியான முதல் ப்ரோமோவில், அமீர் மற்றும் நிரூப் ஆகிய இருவரும் பாதாள சிறையில் அடைபட்டிருக்கின்றனர். அப்போது நிரூப்பிடம் பேசிய அமிர், தாமரையிடம் எல்லோரும் ஏமாறுவதாக தெரிவித்தார். அவர் மிகத்தெளிவாக இருப்பதாகவும், அறியாமையில் எதையும் செய்யவில்லை என்றும் கூறுகிறார். எல்லோரிடமும் தன் மீது ஒரு பரிதாபத்தை உருவாக்கி கொள்கிறார் என்று நினைப்பதாகவும், தனது கண்ணிற்கு தாமரை நெகட்டிவாக தான் தெரிந்தாகவும் அமிர் நிரூப்பிடம் சொல்கிறார்.

    இதையடுத்து 2-வது ப்ரோமோ வெளியானது. வீடியோ ஆரம்பமாகும் போதே போட்டியாளர்கள் அனைவரும் லிவ்இன் ஏரியாவில் அமர்ந்திருக்கின்றனர். அப்போது இந்த வாரம் நடந்த கனா காணும் காலங்கள் டாஸ்க் குறித்து பேசும் அக்ஷரா, "என்னை பொறுத்தவரை சிபி, அவரு கொஞ்சம் ஓவர் ஆக்ட்டிங் பண்ண மாதிரி இருந்தது" என்று சொல்கிறார். அடுத்ததாக பேசிய சிபி, எனக்கு டவுட் ஏதும் இல்ல. அக்ஷரா தான் ஒழுங்கா பெர்ஃபார்ம் பண்ணவில்லை என்கிறார். டாஸ்க்கே புரியாம விளையாடுனாங்க. சுட்டிக் குழந்தையா இல்லாம, ஓரமா மூக்கை சிந்திக்கொண்டு அழுதுகிட்டு இருந்தாங்க. அதனால் அக்ஷராவை நான் சொல்வேன்" எனக் கூறுகிறார்.

    சிபியின் கமெண்டால் கடுப்பான அக்ஷரா, நீங்கள் பேசுவதை ஒழுங்கா பேசுங்க. அதபன்னாங்க, இதபன்னாங்க என்று சொல்லாதீர்கள். சரியாக பேசுங்கள் என்று கூறுகிறார். உடனே குறுக்கிட்ட சிபி, "நான் சொல்ல வேண்டியதை தான் சொல்லுவேன். அழுதுகிட்டே இருந்தீங்க. சுட்டிக் குழந்தை என்பதற்கான மீனிங் உங்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை" என்று தெரிவிக்கிறார். உடனே அக்ஷரா மிகுந்த கோபமடைகிறார். அதோடு 2வது ப்ரோமோ நிறைவடைகிறது.

    இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள 3வது ப்ரோமோவில் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு "ட்ரூத் ஆர் டேர்" டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக போட்டியாளர்கள் அனைவரும் டைனிங் ஏரியாவில் அமர்ந்து கொள்கின்றனர். பாட்டிலை சிபி உருட்டி விட அது அக்ஷராவின் பக்கம் நிற்கிறது. உடனே, ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் அக்ஷரா என கத்துகின்றனர். சிபி அக்ஷராவிடம் ட்ரூத் ஆஹ், டேர் ஆஹ் எனக்கேட்க, பதிலுக்கு டேர் என்று சொல்கிறார் அக்ஷரா. உடனே சிபி ரெண்டு அழுக்கு துணியை எடுத்து துவைத்துவிட்டு வாங்க என்று சொல்கிறார். அதற்கு அக்ஷரா முடியாது என்று சொல்லிவிடுகிறார். ஆரம்பத்தில் இருந்தே சிபிக்கும், அக்ஷராவுக்கும் மோதல் தொடர்ந்து வந்தது.



    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சிபிக்கும் அக்ஷராவுக்கும் இடையே கடும் சண்டை நிலவி வந்ததும் குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக, ராஜு பாட்டிலை உருட்டுகிறார். அது அபிநய் பக்கம் திரும்ப, நான் ட்ரூத் சொல்கிறேன் என்று தெரிவிக்கிறார். உடனே ராஜு "பவானியை லவ் பண்றீங்களா" என்று கேட்கிறார். ராஜுவின் கேள்வியால் ஷாக்கான அபிநய்" ஏய்! என்னடா கேக்குற" என்று அதிர்ச்சியுடன் பார்க்கிறார். மீண்டும் ராஜு அப்போ இல்லையா? எனக் கேட்க, அபிநய் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு மௌனமாக உட்கார்ந்திருக்கிறார். பவானியோ லேசாக சிரித்தபடி பார்க்கிறார். அதோடு ப்ரோமோ முடிகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil 5

    அடுத்த செய்தி