• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • இந்த வார தலைவர் போட்டி... பிக் பாஸ் கொடுத்த வித்தியாச டாஸ்க்!

இந்த வார தலைவர் போட்டி... பிக் பாஸ் கொடுத்த வித்தியாச டாஸ்க்!

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

யார் தலைவராகக் கூடாது என்பதற்கான காரணத்தை தைரியமாக சொல்ல வேண்டும் என பிக் பாஸிடமிருந்து அறிவிப்பு வருகிறது.

  • Share this:
    நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதா வெளியேறிய நிலையில் இன்றைய முதல் பிக் பாஸ் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் இரண்டாவது சீசனில், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

    இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா, பாடகி சின்னப்பொண்ணு, சுருதி ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர் மதுமிதா, பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.



    தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், இந்த வாரம் யார் தலைவராகக் கூடாது என்பதற்கான காரணத்தை தைரியமாக சொல்ல வேண்டும் என பிக் பாஸிடமிருந்து அறிவிப்பு வருகிறது. பிரியங்கா, சிபி, ஐக்கி பெர்ரி, நிரூப் ஆகியோர் தலைவர் பதவிக்கான போட்டியில் இருக்கிறார்கள். இதில் யார் தலைவர் ஆவார்கள், என்ன பிரச்னை வெடிக்கும் என்பதை அறிந்துக் கொள்ள ஆர்வத்துடன் இருக்கிறார்கள் பார்வையாளர்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: