• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5: சுவாரஸ்யமான தலைவர் டாஸ்க் - மோதிக்கொண்ட தாமரை, பிரியங்கா!

Bigg Boss Tamil 5: சுவாரஸ்யமான தலைவர் டாஸ்க் - மோதிக்கொண்ட தாமரை, பிரியங்கா!

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டியில் அக்‌ஷரா, வருண், தாமரை, அபினய், இமான் மற்றும் ராஜு கொடுக்கப்பட்ட பஞ்சுகளை சேகரித்து, எடை போட வேண்டும்.

  • Share this:
    பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் இரண்டாவது சீசனில், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

    இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா, பாடகி சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். அதோடு சில தினங்களுக்கு முன்னர் அபிஷேக் ராஜா மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார். தொடர்ந்து நேற்று பாடகி இசைவாணி, பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.



    இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டியில் அக்‌ஷரா, வருண், தாமரை, அபினய், இமான் மற்றும் ராஜு கொடுக்கப்பட்ட பஞ்சுகளை சேகரித்து, எடை போட வேண்டும். குறைவான பஞ்சுகளை சேகரித்தவர், தலைவராக தகுதியில்லாதவர் என, போட்டியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என பிக் பாஸிடமிருந்து அறிவிப்பு வருகிறது. இறுதியில் பிரியங்காவுக்கும் தாமரைக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. என்ன நடக்கும் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் தெரிந்துக் கொள்வோம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: