ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக்பாஸ் வீட்டில் இந்த வார தலைவர் யார் தெரியுமா?

பிக்பாஸ் வீட்டில் இந்த வார தலைவர் யார் தெரியுமா?

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

கொடுக்கப்பட்ட பெட்டிகளை அடுக்கி, அதில் யாருடைய கோபுரம் உயரமாக உள்ளதோ, அவர் தான் பிக் பாஸ் வீட்டின் இந்த வார தலைவர் எனக் கூறப்படுகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் இரண்டாவது சீசனில், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

  இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா, பாடகி சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து ராப் பாடகி ஐக்கி பெர்ரி நேற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

  கடந்த வாரம் அபிஷேக் ராஜா வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார். அதோடு நடன இயக்குநர் அமீர், நடிகரும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான சஞ்சீவ் ஆகியோரும் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர்.

  இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், இந்த வார தலைவருக்கான போட்டியில் கோபுரங்கள் சாய்வதில்லை என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது. கொடுக்கப்பட்ட பெட்டிகளை அடுக்கி, அதில் யாருடைய கோபுரம் உயரமாக உள்ளதோ, அவர் தான் பிக் பாஸ் வீட்டின் இந்த வார தலைவர் எனக் கூறப்படுகிறது. அதில் சிபி மற்றும் அமீரை விட அண்ணாச்சியின் கோபுரம் உயரமாக இருக்கிறது. அப்போது தலைவரை மாற்றும் சலுகைக்கான வாய்ப்பளிக்கப்படுகிறது என பிக் பாஸ் கூற, ‘நான் பண்றேன் பிக் பாஸ்’ என்கிறார் நிரூப். அதற்கு நீ பயந்துட்ட டா என்கிறார் அண்ணாச்சி.

  Published by:Shalini C
  First published:

  Tags: Bigg Boss Tamil 5