Home /News /entertainment /

Bigg Boss Tamil 5: பிக் பாஸ் வீட்டில் இந்த வார தலைவர் யார்? தீவிரமாகும் போட்டி

Bigg Boss Tamil 5: பிக் பாஸ் வீட்டில் இந்த வார தலைவர் யார்? தீவிரமாகும் போட்டி

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், பிக் பாஸ் வீட்டில் இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் ’உட்ராதீங்க எப்போவ்’ டாஸ்க் வழங்கப்படுகிறது.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஐந்தாவது சீசனில், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

    இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா, பாடகி சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி, இமான் அண்ணாச்சி, ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து அபினய் நேற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். தவிர, அமீர் மற்றும் சஞ்சீவ் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ளனர்.



    இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், பிக் பாஸ் வீட்டில் இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் ’உட்ராதீங்க எப்போவ்’ டாஸ்க் வழங்கப்படுகிறது. அதன்படி கொடுக்கப்பட்ட கயிறை கடைசி வரை விடாமல் பிடித்திருப்பவரே இந்த வார தலைவர் என அறிவிக்கிறார் பிக் பாஸ். இறுதியில் பிரியங்கா... ஏய் என நிரூப் கூப்பிட, ‘ஏய் கீய்ன்னு எல்லாம் கூப்பிடாத, பேர் இருக்கு, பிரியங்கான்னு கூப்பிடு’ என்கிறார் பிரியங்கா. இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படும் எனத் தெரிகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil 5

    அடுத்த செய்தி