Home /News /entertainment /

Bigg Boss Tamil 5 : தலைவர் போட்டியில் வென்ற அமீர் - சலுகையை பயன்படுத்தும் பாவனி?

Bigg Boss Tamil 5 : தலைவர் போட்டியில் வென்ற அமீர் - சலுகையை பயன்படுத்தும் பாவனி?

பிக் பாஸ்

பிக் பாஸ்

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் இந்த வார தலைவருக்கான போட்டியில் ’சுத்தி சுத்தி வந்தீக’ என்ற மியூசிக் சேர் டாஸ்க் கொடுக்கப்படுகிறது.

    பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஐந்தாவது சீசனில், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

    இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா, பாடகி சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து ராப் பாடகி ஐக்கி பெர்ரி சமீபத்தில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். கொரோனா தொற்றால் கமல் பாதிக்கப்பட்டிருப்பதால், கடந்த வார நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

    இதற்கிடையே அபிஷேக், அமீர் மற்றும் சஞ்சீவ் ஆகியோர் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர். இந்நிலையில் கொரோனோவிலிருந்து குணமடைந்த கமல், மீண்டும் பிக் பாஸ் செட்டுக்கு திரும்பினார். இதையடுத்து இரண்டாவது முறையாக அபிஷேக் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டார்.

    தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் இந்த வார தலைவருக்கான போட்டியில் ’சுத்தி சுத்தி வந்தீங்க’ என்ற மியூசிக் சேர் டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இதில் அமீர் வெற்றி பெறுகிறார். அப்போது பாவனியிடம் இருக்கும் சலுகையைப் பயன்படுத்தி, தலைவரை மாற்ற விரும்புகிறீர்களா என பிக் பாஸ் கேட்கிறார். அதற்கு ஆமா பிக் பாஸ் என்கிறார் பாவனி. என்ன நடக்கும் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் தெரிந்துக் கொள்வோம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil 5

    அடுத்த செய்தி