Home /News /entertainment /

நாமினேஷனில் ஓங்கி ஒலிக்கும் பெயர்... டார்கெட் செய்யப்படுகிறாரா பிரியங்கா?

நாமினேஷனில் ஓங்கி ஒலிக்கும் பெயர்... டார்கெட் செய்யப்படுகிறாரா பிரியங்கா?

பிக் பாஸ் பிரியங்கா

பிக் பாஸ் பிரியங்கா

அக்ஷ்ரா மற்றும் நிரூப் பிரியங்காவை நாமினேட் செய்கின்றனர். பிரியங்கா ட்ரிகர் செய்வதாக அக்ஷரா கூறுகிறார்.

    விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி யின் 5வது சீசன் தொடங்கி வெற்றிகரமாக 12 வாரத்தை எட்டியுள்ளது. இறுதிக்கட்டத்தை நோக்கி செல்லும் இந்த நிகழ்ச்சியில் தற்போது பிரியங்கா, ராஜு, பாவ்னி, வருண், அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி, நிரூப், சஞ்சீவ் மற்றும் அமீர் ஆகிய 10 போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் 5 பேர் இறுதிப்போட்டியில் இருப்பார்கள் என்பதால் மீதம் உள்ள 5 பேர் வரும் வாரங்களில் வெளியேற்றப்படுவார்கள்.

    பிக் பாஸ் நிகழ்ச்சி திங்கட்கிழமைகளில் சற்று கூறுதல் விறுவிறுப்பாக இருக்கும். ஏனெனில் இன்று இந்த வாரத்திற்கான வீட்டின் தலைவரை தேர்ந்தெடுக்கும் டாஸ்க் மற்றும் நாமினேஷன் நடைபெறும். அந்த வகையில் இன்று வழக்கம் போல நாமினேஷன் நடைபெறுவது இன்று வெளியான மூன்றாவது ப்ரோமோவில் தெரிகிறது. இதில் முதல் நபராக பேசும் அமீர், மற்றவர்களை காயப்படுத்தும் வகையில் பேசுவதாக நிரூப்பை நாமினேட் செய்கிறார்.

    பின்னர் அக்ஷ்ரா மற்றும் நிரூப் பிரியங்காவை நாமினேட் செய்கின்றனர். பிரியங்கா ட்ரிகர் செய்வதாக அக்ஷரா கூறுகிறார். பாவ்னியை நாமினேட் செய்வதாக கூறும் சிபி, அபிநய் பிரச்னையில் அவர் முன்பே கூறாமல் கடைசி வரை இழுத்தடித்தாக கூறுகிறார். இறுதியாக, சின்ன சின்ன விஷயங்களை பெரிதாக்குவதாக பாவ்னியை, ராஜு நாமினேட் செய்கிறார். நாமினேஷனில் லிஸ்டில் இருப்பவர்கள் முழு விவரமும் இன்று வெளியாகும் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

    முன்னதாக இன்று வெளியான முதல் ப்ரோமோவில், பிக் பாஸ் வீட்டில் இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் ’உட்ராதீங்க எப்போவ்’ டாஸ்க் வழங்கப்படுகிறது. அதன்படி கொடுக்கப்பட்ட கயிறை கடைசி வரை விடாமல் பிடித்திருப்பவரே இந்த வார தலைவர் என அறிவிக்கிறார் பிக் பாஸ். இரவு பகலாக தொடரும் இந்த டாஸ்கில் அனைவரும் கயிற்றை பிடித்து கொண்டே தூங்குகின்றனர். பின்னர் மறுநாள் காலை வரை கயிற்றைபிடித்து கொண்டே இருக்கும் நிலையில், ராஜு கயிறை விட்டு விட்டு எழுந்து செல்லும் காட்சிகள் உள்ளது.

    இறுதியில் பிரியங்கா... ஏய் என நிரூப் கூப்பிட, ‘ஏய் கீய்ன்னு எல்லாம் கூப்பிடாத, பேர் இருக்கு, பிரியங்கான்னு கூப்பிடு’ என பிரியங்கா கோபமாக கூறும் காட்சிகள் உள்ளது. இதனை தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் நிரூப் - பிரியங்கா இடையே கடுமையாக வாக்குவாதம் நடைபெறுகிறது. அதில், நீ அனைத்து பிரச்னை நடக்கும் போதும் சரியோ... தவறோ.. உன் வாய்ஸ் இருக்க வேண்டும் என பேசுகிறாய் என நிரூப் கத்துகிறார்.



    அதற்கு பிரியங்கா, நான் அவளிடம் பேசுகிறேன், உனக்கு என்னடா பிரச்சனை? என கேட்கிறார். இதனை கேட்ட நிரூப், நீ ஒரு செல்பிஷ், ஈவில், அடுத்தவர்களின் கஷ்டத்தை பார்த்து சந்தோசப்படும் ஒரே நபர் நீ தான் அடுக்கடுக்காக குற்றம் சாட்டும் காட்சிகள் உள்ளது. இதனால் இன்று தலைவர் போட்டியில் பிரச்சனை ஏற்படும் என்பது தெளிவாக தெரிகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil 5

    அடுத்த செய்தி