• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5: 'தீர்மானத்தை சொல்லியே ஆகணும்’ ட்விஸ்ட் வைக்கும் கமல்!

Bigg Boss Tamil 5: 'தீர்மானத்தை சொல்லியே ஆகணும்’ ட்விஸ்ட் வைக்கும் கமல்!

பிக் பாஸ் கமல்

பிக் பாஸ் கமல்

இந்த வாரம் யார் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

  • Share this:
    பிக் பாஸ் நிகழ்ச்சியின் தற்போதைய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் இரண்டாவது சீசனில், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

    இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா இருவரும் அடுத்தடுத்த இரண்டு வாரங்களில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட, பாடகி சின்னப்பொண்ணு கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இந்த வாரம் யார் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், ’என்ன கேக்காதீங்கங்கற மாதிரியே உக்காந்து இருக்காரு ராஜு, நீங்க சொல்லுங்க, யார் சேவ் பண்ண படுவாங்க?’ என கமல் கேட்க, ‘சுருதி... முன்னாடி நடந்ததுல இருந்து நல்லத எடுத்து, அவங்கள மாத்திக்கிட்டாங்க’ என்கிறார் ராஜு.



    'தீபாவளிங்கறனால தாமரை அக்கா பழம் விட்டு, நாங்கெல்லாம் லவ்வா ஃபீல் பண்ணோம்’ என பிரியங்கா சொல்ல, “அவங்க எடுக்குற தீர்மானத்த எடுத்துடுவாங்க, அத நான் உங்கக்கிட்ட சொல்லியே ஆகணும்” என்கிறார் கமல்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: