• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5: வித்தியாசமாக நடக்கும் இந்த வார நாமினேஷன் - பட்டியலில் இருப்பவர்கள் யார்?

Bigg Boss Tamil 5: வித்தியாசமாக நடக்கும் இந்த வார நாமினேஷன் - பட்டியலில் இருப்பவர்கள் யார்?

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், நாமினேஷன் லிஸ்டில் இடம்பிடித்தவர்கள்

  • Share this:
    விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் நமீதா, நாடியா சாங், அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, சுருதி ஆகியோர் அடுத்தது வெளியேறினர். கடந்த வார நாமினேஷன் லிஸ்டில் அக்ஷ்ரா, அபினய், இமான், ராஜு, பாவ்னி, மதுமிதா, சிபி ஆகியோர் இருந்த நிலையில் இதில் அபினய் வெளியேறுவார் என சகபோட்டியாளர்கள் எதிர்பார்த்த நிலையில் அவர் காப்பாற்றப்பட்டார். இறுதியாக இமான், மது இருந்த நிலையில் மது வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.

    பின்னர் கண்ணீர்மல்க சக போட்டியார்களிடம் விடைபெற்று மது வெளியேறினார். இந்தநிலையில் இன்று திங்கட்கிழமை என்பதால் இந்த வாரம் தலைவர் யார் மற்றும் நாமினேஷன் பட்டியலில் யார் வரப்போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாகக் காத்திருக்கின்றனர். மேலும் இந்தவாரம் நாணயம் வைத்திருக்கும் வருணிற்கு அதிகாரம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருண் - நிரூப் இடையே பிரச்னை இருக்கும் நிலையில் இதனால் மோதல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தநிலையில் இன்று வெளியான முதல் இரண்டு ப்ரோமோக்களில் இந்தவாரத்திற்கான தலைவர் டாஸ்க் நடைபெறுகிறது. அதில் இந்த வாரம், யார் தலைவராக கூடாது என்பதற்கான காரணத்தை சொல்ல வேண்டும் என்று பிக்பாஸ் வித்தியாசமான தலைவர் போட்டியை அறிவித்துள்ளார்.

    யாரைத் தலைவராக தேர்ந்தெடுத்தால் வீடு விளங்காது என்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்று இமான் அண்ணாச்சி முதல் புரோமோவில் கூறினார். பிரியங்கா, சிபி, ஐக்கி மற்றும் நிரூப் ஆகிய நால்வரும் இந்த போட்டியில் பங்கேற்கும் நிலையில், தலைவர் பதவிக்காக மற்றும் பிரியங்கா - நிரூப் காரசாரமாக மோதி கொள்கின்றனர். இதனால் இந்த டாஸ்கில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

    தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், நாமினேஷன் லிஸ்டில் இடம்பிடித்தவர்கள் விவரம் குறித்து பிக் பாஸ் அறிவிக்கிறார். அதில், ஐக்கி, பாவ்னி, சிபி, இமான் மற்றும் அபினய் என கூறப்படுகிறது. இந்த நாமினேஷன் கார்டன் ஏரியாவில் நடக்கிறது. அதில் ஒரு ஸ்டாண்ட் அமைத்து போட்டியாளர்களின் புகைப்படங்கள் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது. நாமினேட் செய்ய விரும்பும் போட்டியாளரின் புகைப்படத்தில் ஸ்பிரே அடிக்குமாறு கூறப்படுகிறது.



    அதில் ஜக்கியை , பிரியங்கா நாமினேட் செய்கிறார். பாவ்னியை - இமான், சிபியை - அக்ஷ்ரா, இசைவாணியை - ஐக்கி, இமான் அண்ணாச்சியை - அபினயும் நாமினேட் செய்வது தெரிகிறது. ஆனால் ஒவ்வொருவரும் இரண்டு போட்டியாளர்களை நாமினேட் செய்ய வேண்டும் என்பதால், நாமினேஷன் குறித்த முழு விவரமும் இன்றைய நிகழ்ச்சியில் வரும், எனவே எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: