• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5: எலிமினேஷனில் இருந்து தப்பிக்க பிக் பாஸ் கொடுத்த சுவாரஸ்யமான டாஸ்க்!

Bigg Boss Tamil 5: எலிமினேஷனில் இருந்து தப்பிக்க பிக் பாஸ் கொடுத்த சுவாரஸ்யமான டாஸ்க்!

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் வீட்டில் விலை மதிப்பற்ற 5 நாணயங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதை திருடுபவர்கள், இந்த வார எலிமினேஷனில் இருந்து தப்பிக்கலாம்.

  • Share this:
    விஜய் டிவி-யின் இன்றைய பிக் பாஸ் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

    இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு நாடியா சங் முதல் ஆளாக வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து தற்போது 16 போட்டியாளர் உள்ளனர். இதைத் தொடர்ந்து தற்போதைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பிக்பாஸிடமிருந்து போட்டியாளர்களுக்கு ஒரு அறிவிப்பு வந்துள்ளது.



    வீட்டில் விலை மதிப்பற்ற 5 நாணயங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதை திருடுபவர்கள், இந்த வார எலிமினேஷனில் இருந்து தப்பிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது. எனவே எலிமினேஷனில் இருந்து தங்களை காத்துக் கொள்ளும் பொருட்டு, போட்டியாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த டாஸ்கை செய்கிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: