• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5: வளர்ப்பு குறித்து பேசிய தாமரைச்செல்வி? கண்கலங்கும் ஸ்ருதி!

Bigg Boss Tamil 5: வளர்ப்பு குறித்து பேசிய தாமரைச்செல்வி? கண்கலங்கும் ஸ்ருதி!

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

தற்போது வெளியாகிய இரண்டாவது ப்ரோமோவில், தாமரைச்செல்வியால் சுருதியும், பாவனியும் அழுகிறார்கள்.

  • Share this:
    பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூன்று வாரங்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தினமும் டாஸ்க் கொடுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த வாரம் பஞ்சதந்திரம் என்ற டாஸ்க் ஒன்று வழங்கப்பட்டது. அதில், நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று என ஐந்து நாணயங்கள் கொடுக்கப்படும். அந்த நாணயத்தை சக போட்டியாளர்களுக்கு தெரியாமல் எடுத்து மறைத்து வைத்து கொள்ள வேண்டும்.

    அப்படி எடுத்த நாணயத்தை அவருக்கே தெரியாமல் மற்றவர்கள் திருடியும் வைத்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த பஞ்சதந்திரம் டாஸ்கில் வெற்றி பெறுபவர்கள் நாமினேஷன் லிஸ்டில் இருந்தால் அவர், அதில் இருந்து விடுவிக்கப்படுவார் , ஒருவேளை அவர் பெயர் நாமினேஷனில் இல்லை என்றால் அவர் விருப்பப்படும் நபரை சேவ் செய்து கொள்ளலாம் என பிக் பாஸ் அறிவித்திருந்தார்.

    மேலும் வீட்டின் தலைவரை மாற்றி அந்த உரிமையை பறித்து கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த டாஸ்கில் பெரும்பாலானோர் குழுவாக விளையாடினர், இறுதியாக பாவ்னி, இசைவாணி, நிரூப், தாமரை மற்றும் வருண் ஆகிய ஐந்து பேரும் வெற்றி பெற்றனர். இந்த வாரம் நாமினேஷனில் மாற்றம் ஏற்படுத்தவும், வீட்டின் தலைவரை மாற்றவும் இந்த ஐவரும் விரும்பாததால் யாரும் நாணயத்தை பயன்படுத்தவில்லை.

    மேலும் இந்த நாணயங்களை இப்போதும் யார் வேண்டுமானாலும் திருடலாம் என்பதால் நாணயத்தை வைத்திருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பிக் பாஸ் அறிவித்துள்ளார். இதனால் பாவ்னி, இசைவாணி, நிரூப், தாமரை மற்றும் வருண் ஆகியோரது நாணயத்தை திருட மற்ற ஹவுஸ் மேட்ஸ் முயற்சித்து வருகின்றனர். இந்தநிலையில் இன்று ஸ்ருதி, தாமரையின் நாணயத்தை திருடி விடுகிறார். இதனால் வரும் பிரச்சனைகள் இன்று வெளியான மூன்று ப்ரோமோக்களிலும் காட்டப்பட்டுள்ளது.

    இரண்டாவது ப்ரோமோவில், "நாணயத்திற்காக இப்படியாக ஒரு பாசத்தை இழப்பீர்கள், பிள்ளைகளை பாரு... சீ" என கூறியவாறு தாமரை அழுகிறார். அப்போது ஸ்ருதி, இப்படி தேவையில்லாத வார்த்தைகளை விடாதீர்கள் என்கிறார். அப்போது குறுக்கிடும் பாவ்னி, இவ்ளோ பிரச்னை செய்து உனக்கு இந்த நாணயம் வேண்டுமா? என்கிறார். அதற்கு ஸ்ருதி, இப்போது இந்த நாணயத்தை நான் திருப்பி கொடுத்தால் என் மீதான குற்றச்சாட்டுகளை நான் ஏற்றுக்கொண்டது போலாகிவிடும் என கூறும் காட்சிகள் இருந்தது.



    இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், பாவனி மற்றும் ஸ்ருதி அழுது கொண்டிருக்கின்றனர். இசை அவர்களை சமாதானப்படுத்துகிறார். அப்போது ஸ்ருதி, என்னுடைய வளர்ப்பு குறித்து பேசியுள்ளார், பிள்ளையா நீ என்றும் உங்களுக்கு அசிங்கமாக இல்லையா? என்றும் பேசியுள்ளார் என கூறி அழும் காட்சிகள் உள்ளது. நாணயத்தை திருட வேண்டும் என்பது தான் டாஸ்க் என்பதால் ஸ்ருதி மீது தவறு இல்லை என்று நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். கடந்த சீசனில் சம்யுக்தா, வளர்ப்பு குறித்து பேசியதால் பிரச்னை ஏற்பட்ட நிலையில் தற்போது தாமரை இப்படி பேசியுள்ளது குறித்து கமல் இந்த வாரம் பேசுவார் என எதிர்பார்க்கப்டுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: