• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5: ’நீ பண்ணினது துரோகம்’ - கண்ணீர் விடும் தாமரைச்செல்வி

Bigg Boss Tamil 5: ’நீ பண்ணினது துரோகம்’ - கண்ணீர் விடும் தாமரைச்செல்வி

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

தான் எடுத்து வைத்திருந்த காயினை பிக் பாஸ் கேமரா முன்பு காட்டுகிறார் சுருதி.

  • Share this:
    இன்றைய பிக் பாஸ் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

    இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

    இந்நிலையில் நாடியா சங் மற்றும் அபிஷேக் ராஜா இருவரும் அடுத்தடுத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதால், தற்போது 15 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இதையடுத்து வரும் வாரத்திற்கான எலிமினேஷனுக்கு நேற்று நாமினேஷன் நடந்தது.

    இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், தான் எடுத்து வைத்திருந்த காயினை கேமரா முன்பு காட்டுகிறார் சுருதி. இதைப் பார்த்த தாமரைச்செல்வி, ’சொல்லிட்டு எடுத்துருக்கலாம்ல’ என்கிறார். அதற்கு ‘அக்கா இந்த கேமே இதான். நாங்க சொன்னோம்ல, நீங்க அசந்தா எடுப்போம்ன்னு’ என்று கூற, ‘என்ன இருந்தாலும் நீ பண்ணினது துரோகம்’ என்கிறார் தாமரை.



    அதற்கு, ‘இந்த மாதிரி பெரிய வார்த்தை எல்லாம் பேசாதீங்க’ என சுருதி கூற, ‘கடவுளே இந்த மாதிரி என்னை கொண்டு வந்து விட்டுட்டாங்களே’ என அழுகிறார் தாமரை.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: