Home /News /entertainment /

Bigg Boss Tamil 5: மீண்டும் பிக் பாஸ் வீட்டில் தாமரைச்செல்வி!

Bigg Boss Tamil 5: மீண்டும் பிக் பாஸ் வீட்டில் தாமரைச்செல்வி!

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

தற்போது வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.

    பிக் பாஸ் நிகழ்ச்சியின் தற்போதைய ப்ரோமோவில், வீட்டுக்குள் மீண்டும் தாமரைச்செல்வி வந்திருப்பது காட்டப்படுகிறது.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். வைல்டு கார்டு என்ட்ரியாக அமீர் மற்றும் சஞ்சீவ் பங்கேற்றனர். சஞ்சீவ் வெளியேறிய நிலையில், அமீர் முதல் ஃபைனலிஸ்ட்டாக தேர்வானார்.

    இந்த நிகழ்ச்சியில் தனிப்பட்ட காரணங்களுக்காக நமீதா மாரிமுத்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து முதல் வாரத்தில் குறைந்த வாக்குகள் பெற்றதால் நாடியா வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து பிரபல யூடியூபரான அபிஷேக் ராஜா இரண்டாவது நபராக வெளியேற்றப்பட்டார். பின்னர் சின்ன பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி, இமான் அண்ணாச்சி, அபிநய், அக்‌ஷரா, வருண், வைல்ட் கார்டு எண்ட்ரியில் உள்ளே வந்த சஞ்சீவ், தாமரைச்செல்வி ஆகியோர் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.



    கடவுள் அவரை ஆசீர்வதிக்கட்டும் - சித்தார்த் மன்னிப்பு குறித்து சாய்னா நேவால்!

    இந்நிலையில் தற்போது வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். அந்த வகையில் நேற்று நாடியா, மதுமிதா, சிபி, அபினய் ஆகியோர் வந்திருந்தார்கள். தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், தாமரைச்செல்வி மீண்டும் வீட்டுக்குள் வந்திருப்பதைக் காண முடிகிறது. அவரை கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்துகிறார் பிரியங்கா. மீண்டும் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி என தாமரையை வரவேற்கிறார் பிக் பாஸ்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5

    அடுத்த செய்தி