Home /News /entertainment /

Bigg Boss Tamil 5: பிக் பாஸ் வீட்டில் தாமரை மகன்!

Bigg Boss Tamil 5: பிக் பாஸ் வீட்டில் தாமரை மகன்!

பிக் பாஸ்

பிக் பாஸ்

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், தாமரையின் மகன் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார். அவனைப் பார்த்த தாமரை உணர்ச்சிவசப்பட்டு அழுகிறார்.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஐந்தாவது சீசனில், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

    இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா, பாடகி சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி, இமான் அண்ணாச்சி, ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து அபினய் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். தவிர, அமீர் மற்றும் சஞ்சீவ் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ளனர்.



    இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்கு போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை புரிந்த வண்ணம் உள்ளனர். பல வாரங்கள் கழித்து தங்கள் குடும்பத்தினரை சந்திக்கும் போட்டியாளர்கள் மிகுந்த உணர்ச்சிவசப்படுகின்றனர். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், தாமரையின் மகன் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார். அவனைப் பார்த்த தாமரை உணர்ச்சிவசப்பட்டு அழுகிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil 5

    அடுத்த செய்தி