• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5: இசைவாணி தாமரைச்செல்வி இடையே தொடரும் சண்டை

Bigg Boss Tamil 5: இசைவாணி தாமரைச்செல்வி இடையே தொடரும் சண்டை

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

இதில் ராஜு, வருண், இமான் அண்ணாச்சி ஆகியோர் விக் வைத்து தனது பிம்பங்கள் போல செய்து கொண்டிருந்தனர்

  • Share this:
    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஐந்தாவது சீசன் 45 நாட்களை கடந்து சுவாஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தினமும் டாஸ்குகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த இரண்டு நாட்களாக ’உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி’ என்ற டாஸ்க் வழங்கப்பட்டது. அதில், போட்டியாளர்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு, டீம் ஏ கண்ணாடியாக மாறி, டீம் பி-யினரை பிரதிபலிக்க வேண்டும் என பிக் பாஸ் அறிவித்தார். சிபி- அக்‌ஷராவின் கண்ணாடியாகவும், இசைவாணி - இமான், பாவ்னி - ராஜு , பிரியங்கா - தாமரை, ஐக்கி - வருண், நிரூப் - அபினய் கண்ணாடியாகவும் பிரியுமாறு அறிவிக்கப்பட்டது.

    அதன்படி ஒவ்வொருவரும் தங்களது டீம் நபர் போல பேச்சு, நடை, உடை, பாவனை என பின்னி பெடலெடுத்தனர். இதனை தொடர்ந்து லிங்கிங் எரியாவில் ஜோடிகளாக பிரிக்கப்பட்ட இருவரும் கைக்கோர்த்து சேர்ந்து நின்று ஒருவர் பற்றிய கருத்துக்களை சொல்ல வேண்டும் என்றும் டாஸ்கில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி அபினய் குறித்து நிரூப் மற்றும் இமான் குறித்து இசைவாணியும், ராஜு குறித்து பாவ்னியும், அக்ஷ்ரா குறித்து சிபியும், வருண் குறித்து ஐக்கியம், தாமரை குறித்து பிரியங்காவும் பேசினர்.

    நேற்றைய நிகழ்ச்சியில் இந்த டாஸ்கின் இரண்டாவது சுற்று நடைபெற்றது. அதில் முதல் சுற்றில் இருந்த ஜோடிகள் அனைத்தும் மாற்றப்பட்டன. அதன்படி, அபினய் - சிபியின் கண்ணாடியாகவும், இமான் - ஐக்கியின் கண்ணாடியாகவும், வருண் - நிரூப்பின் கண்ணாடியாகவும், ராஜு - பிரியங்காவின் கண்ணாடியாகவும், அக்ஷ்ரா - பாவ்னியின் கண்ணாடியாகவும், தாமரை - இசைவாணியின் கண்ணாடியாகும் பிரதிபலிக்க வேண்டும் என பிக் பாஸ் அறிவித்தார்.

    இதில் ராஜு, வருண், இமான் அண்ணாச்சி ஆகியோர் விக் வைத்து தனது பிம்பங்கள் போல செய்து கொண்டிருந்தனர். இதனை தொடர்ந்து ராஜு குறித்து பாவ்னி பேசினார். தன்னிடம் மட்டும் சரியாக பேசுவதில்லை என்றும் உங்களை எனக்கு பிடிக்கும் என்றும் பாவ்னி கூறினார். இதனை கேட்டு ராஜு எந்தவொரு ரீயாக்ஷன் இல்லாமல் இருந்தார். பின்னர் பிரியங்கா குறித்த கருத்துக்களை ராஜு கூறினார். அதில் பாவ்னி உங்களை ஏத்தி விடுகிறார், நீங்கள் அமைதியாக இருங்கள் என்றும் கூறினார். இதனால் கடுப்பான பாவ்னி, என்னைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என என்னிடம் தெளிவாக கூறுங்கள் என ராஜுவிடம் என கேட்டார். இதுகுறித்து தெளிவாக பின்னர் பேசலாம் என கூறிவிட்டு சென்றுவிட்டார் ராஜு.

    இந்தநிலையில் தற்போது வெளியாகியுள்ள முதல் இரண்டு ப்ரோமோக்களிலும் இந்த டாஸ்கின் இரண்டாவது சுற்று தொடர்வது தெரிகிறது. முதல் ப்ரோமோவில், இசைவாணி குறித்து தாமரை பேசுகிறார். அதில், “எனக்கு எதுவுமே புரியலைன்னு சொல்வீங்க. உனக்கு புத்தி சொல்ற அளவுக்கு எனக்கு நிறையவே புத்தி இருக்கு. அவங்க குடுத்து விட்ட கீரை, காய்கறியை சாப்பிட ஆள் இல்ல. அதைத்தான் சொல்ல வந்தேன். அப்போ நீங்க கையெடுத்து கும்பிடவும் எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு என்றார். அதற்கு இசை, முகம் சுழித்து குனியும் நிலையில், ஏய் மொகரைய காட்ட மாட்டியா எத்தனை தடவை உன்ன அழகா காட்டிருக்கேன் என தாமரை கூறுகிறார். மேலும் "தாமரை கிண்ணங்கள்... " என்ற பாடலையும் பாடுகிறார். இதனால் கடுப்பான இசை, என்ன நக்கலாக பாடுகிறாய்? என கேட்கிறார்.



    இதனை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், இசைவாணி - தாமரை பிரச்சனை தொடர்கிறது. அதில் மனசாட்சி படி கூறு நீ நக்கலாக பாட்டு பாடினாயா? அல்லது சந்தோசமாக பாடினாயா? என இசை கேட்கிறார். அதற்கு தாமரை, நான் என் சந்தோஷத்திற்காக பாடினேன், உன்னை பற்றி பேச அதற்குமேல் ஒன்றுமில்லை, இருந்தா தானே பேச என்கிறார். மேலும் மனசாட்சியை கொன்று விட்டு என்னால் வாழ முடியாது என கூறிவிட்டு தாமரை எழுந்து செல்லும் காட்சிகள் உள்ளது. இதனால் இந்த டாஸ்கில் இன்றும் பிரச்னை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: