ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக் பாஸ் வீட்டில் தாமரையின் கணவர் சர்ப்ரைஸ் எண்ட்ரி!

பிக் பாஸ் வீட்டில் தாமரையின் கணவர் சர்ப்ரைஸ் எண்ட்ரி!

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

தாமரையின் குடும்பத்தில் இருந்து யார் வருவார் என்பது பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. கியூட்டான துறுதுறுப்பான தாமரையின் மகன் வரும் காட்சிகள் வெளியாகி ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் அமீர், சஞ்சீவ் வைல்டு கார்டு எண்ட்ரியாக வருகை தந்தனர். இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை 10 பேர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் தற்போது பிரியங்கா, ராஜு, பாவ்னி, வருண், அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி, நிரூப், சஞ்சீவ் மற்றும் அமீர் ஆகிய 10 போட்டியாளர்கள் உள்ளனர்.

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஃபிரீஸ் டாஸ்க் நடைப்பெற்று வருகிறது. ஒவ்வொரு பிக் பாஸ் சீசனிலும் இந்த டாஸ்கை ரசிகர்களும் சரி, போட்டியாளர்களும் சரி மிகவும் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டுக்குள் வருவது பலராலும் ரசிக்கப்படும் ஒன்று. கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக தங்கள் குடும்பத்தை பார்க்காமல் இருக்கும் போட்டியாளர்களின் அம்மா, அப்பா, மனைவி, நண்பர்கள் என உறவுகளைப் பார்க்கும் போது, பாசத்தில் அழுது தீர்ப்பார்கள். சில நேரங்களில் போட்டியாளர்களின் அழுகை, ரசிகர்கள் கண்களிலும் கண்ணீரை வர வைத்து விடும் அளவுக்கு நெகிழ்வாக இருக்கும்.

பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்த தாமரையின் குடும்பம் இன்று பிக் பாஸ் வீட்டுக்கு வருகை தந்துள்ளது. ஏற்கனவே முதல் மகனைப் பிரிந்திருக்கும் தாமரையின் குடும்பத்தில் இருந்து யார் வருவார் என்பது பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. கியூட்டான துறுதுறுப்பான தாமரையின் மகன் வரும் காட்சிகள் முதல் புரோமோவில் வெளியாகி ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. அப்பா எங்கே என்று அக்ஷரா கேட்டதற்கு, அவர் வெளியூரில் இருக்கிறார் என்று சுட்டிப்பையன் பதில் அளித்ததான். இந்நிலையில், தற்போது வெளியான இரண்டாவது புரோமோவில், தாமரையின் கணவர் பிக் பாஸ் ஹவுசிற்கு வந்துள்ளார்.

மிகவும் இயல்பாக அனைவரோடும் பழகிய தாமரையின் கணவர், அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். “உங்க எல்லாராலையும் தான் தாமரை இவ்ளோ தூரம் வந்துருக்க” அனைவரிடமும் கூறினார். அதே போல தாமரையிடமும், ‘அதிகமாக கோவப்படாத, கோவத்தை கட்டுப்படுத்து’ என்றும் அட்வைஸ் செய்துள்ளார். தாமரையின் மகன் கொண்டு வந்த பூவை அவரின் கணவர் தாமரைக்கு வைத்து விடும் காட்சி அழகாக இருந்தது.

இன்றைய எபிசோடு உணர்ச்சி பூர்வமாக இருக்கப் போகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல, தாமரையின் மூத்த மகன் வருவாரா என்ற எதிர்பார்ப்பும் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.

கிட்டத்தட்ட அனைவரின் குடும்பமும் ஃபிரீஸ் டாஸ்க்கில் வந்துவிட்ட நிலையில், நடிகர் சஞ்சீவ் குடும்பமும், டான்ஸ் மாஸ்டர் அமீரின் குடும்பமும் மட்டும் வரவேண்டும். அவர்களின் குடும்பம் இன்று வருகை தருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Bigg Boss Tamil 5