Home /News /entertainment /

Bigg Boss Tamil 5: பிக் பாஸ் ஆண்கள் மீது கோபத்தில் தாமரை

Bigg Boss Tamil 5: பிக் பாஸ் ஆண்கள் மீது கோபத்தில் தாமரை

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

தாமரை, பாவனி, பிரியங்கா ஆகிய மூன்று பெண்கள் மட்டுமே தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் நிலையில், ஆண்கள் வேலை செய்ய மறுப்பதை இந்த ப்ரோமோ உணர்த்துகிறது.

    பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் தனிப்பட்ட காரணங்களுக்காக நமீதா மாரிமுத்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் வாரத்தில் குறைந்த வாக்குகள் பெற்றதால் நாடியா வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து பிரபல யூடியூபரான அபிஷேக் ராஜா இரண்டாவது நபராக வெளியேற்றப்பட்டார். பின்னர் சின்ன பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி, இமான் அண்ணாச்சி, அபிநய் ஆகியோர் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அக்‌ஷரா - வருண் இருவரும் ஒன்றாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து இந்த வாரம் வைல்ட் கார்டு எண்ட்ரியில் உள்ளே வந்த சஞ்சீவ் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்.



    இதையும் படிங்க - ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா ரஹ்மான் நிச்சயதார்த்தம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?

    இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், ’என்னென்ன கொடுமை படுத்துறாய்ங்கப்பா. ஒருத்தணுக்கும் பாத்திரம் விளக்குறது பிடிக்காதாம். ஒரு தலைவர் இல்ல, நம்ம தான் எல்லாத்தையும் பண்ணனும், இப்போ கூட பொறுப்பு வரல’ என்கிறார் தாமரை. அதற்கு ‘எப்போவுமே வராதது இப்போ வரும்ன்னு நினைக்குறியா?’ என்கிறார் பிரியங்கா. தாமரை, பாவனி, பிரியங்கா ஆகிய மூன்று பெண்கள் மட்டுமே தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் நிலையில், ஆண்கள் வேலை செய்ய மறுப்பதை தான் இந்த ப்ரோமோ உணர்த்துகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil 5

    அடுத்த செய்தி