• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5: ’உன் மேல பயங்கர கோவமா இருக்கேன் போய்டு’ - சுருதி மீது கடுப்பான தாமரை

Bigg Boss Tamil 5: ’உன் மேல பயங்கர கோவமா இருக்கேன் போய்டு’ - சுருதி மீது கடுப்பான தாமரை

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

இந்த நாணயங்களை இப்போதும் யார் வேண்டுமானாலும் திருடலாம் என்பதால் நாணயத்தை வைத்திருப்பவர்கள்

  • Share this:
    பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இதுவரை நமீதா மாரிமுத்து, நாடியா, அபிஷேக் வெளியேற்றப்பட்ட்டுள்ளதால் தற்போது 15 போட்டியாளர்கள் உள்ளனர். கடந்த வாரம் நடைபெற்ற பஞ்சதந்திரம் டாஸ்கில் வெற்றி பெறுபவர்கள் நாமினேஷன் லிஸ்டில் இருந்தால் அவர், அதில் இருந்து விடுவிக்கப்படுவார் , ஒருவேளை அவர் பெயர் நாமினேஷனில் இல்லை என்றால் அவர் விருப்பப்படும் நபரை சேவ் செய்து கொள்ளலாம் என பிக் பாஸ் அறிவித்திருந்தார்.

    அதன்படி பஞ்சதந்திரம் டாஸ்கில் வெற்றி பெற்று பாவனி, இசைவாணி, நிரூப், தாமரை மற்றும் வருண் ஆகிய ஐந்து பேரிடம் நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று என ஐந்து நாணயங்கள் உள்ளன. இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை என்பதால் இந்த வாரத்திற்கான தலைவரை தேர்ந்தெடுக்கும் டாஸ்க் வழங்கப்பட்டது. இதில் பெயரை மாற்றி மாற்றி சொல்லும் டாஸ்க் வழங்கப்பட்டது, இதில் இறுதியாக பிரியங்கா மற்றும் மது இருந்த நிலையில் மது வெற்றி பெற்று தலைவராகியுள்ளார்.

    பின்னர் நாணயங்கள் வைத்திருக்கும் ஐந்து பேரை அழைத்த பிக் பாஸ் தங்கள் நாணயத்தை பயன்படுத்தி மதுவிற்கு பதிலாக நீங்கள் ஐவரில் ஒருவர் தலைவராக மாறலாம் என்றார். ஆனால் அனைவரும் மது தலைவராக இருக்க விரும்புவதாக தெரிவித்த நிலையில் அடுத்த வாரம் நாணயத்தை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து நான்காவது வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது. அதில் பாவனி, அபினய், பிரியங்கா, அக்ஷரா, வருண், ஸ்ருதி, இசைவாணி, இமான் மற்றும் சின்னப்பொண்ணு ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். மேலும் தற்போது நாமினேட் ஆனவர்களிடம் உள்ள நாணயத்தின் சலுகையை பயன்படுத்தி உங்களுக்கு பதிலாக வேறு ஒருவரை நாமினேஷனுக்கு தேர்வு செய்யலாம் என பிக் பாஸ் அறிவித்தார்.

    ஆனால் காயின் வைத்திருந்த பாவனி, இசைவாணி மற்றும் வருண் ஆகியோர் தாங்கள் நாமினேஷனில் இருப்பதையே விரும்புவதாக தெரிவித்தால் இறுதி பட்டியல் உறுதியானது. இந்த நாணயங்களை வைத்திருக்கும் ஐவரும் ஒவ்வொரு வாரம் வீட்டை அதிகாரம் செய்யலாம் என பிக் பாஸ் அறிவித்துள்ளார். அதன்படி இந்த வாரம் நெருப்பு நாணயத்தை வைத்திருக்கும் இசைவாணி சமையலறையை கட்டுப்படுத்துவார் என கூறப்பட்டுள்ளது.

    இந்த நாணயங்களை இப்போதும் யார் வேண்டுமானாலும் திருடலாம் என்பதால் நாணயத்தை வைத்திருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பிக் பாஸ் அறிவித்துள்ளார். இந்தநிலையில் இன்று ஸ்ருதி, தாமரையின் நாணயத்தை திருடி விடுகிறார். இதனை தெரிந்து கொண்ட தாமரை ஸ்ருதியிடம் சண்டை போடும் காட்சிகள் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் இருந்தது.

    இதனை தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில், ஒரு "நாணயத்திற்காக இப்படியாக ஒரு பாசத்தை இழப்பீர்கள், பிள்ளைகளை பாரு... சீ" என கூறியவாறு தாமரை அழுகிறார். அப்போது ஸ்ருதி, இப்படி தேவையில்லாத வார்த்தைகளை விடாதீர்கள் என்கிறார். அதற்கு தாமரை நான் நாணயத்தை எடுத்ததற்கு பேசவில்லை, நீ செய்த வேலை தவறு என கூறுகிறார். அப்போது குறுக்கிடும் பாவனி, நான் ஸ்ருதிக்கு உதவவே இல்லை என கூறிவிட்டு, ஸ்ருதியிடம் இவ்ளோ பிரச்னை செய்து உனக்கு இந்த நாணயம் வேண்டுமா? என்கிறார்.



    அதற்கு ஸ்ருதி, இப்போது இந்த நாணயத்தை நான் திருப்பி கொடுத்தால் என் மீதான குற்றச்சாட்டுகளை நான் ஏற்றுக்கொண்டது போலாகிவிடும் என கூறுகிறார். மேலும் தாமரையிடம் உண்மையாக என்ன நடந்தது என கூறுங்கள் என அழுதவாறு கூறுகிறார். அதற்கு தாமரை, நான் உண்மையை தான் கூறுகிறேன், உன் மீது நான் பயங்கர கோபமாக இருக்கிறேன்... போய்விடு என்கிறார். இதனால் தாமரையின் நாணயத்தை ஸ்ருதி எடுப்பதால் பிரச்சனைகள் வருவது தெரிகிறது. எனினும் நாணயத்தை திருடுவது தான் விளையாட்டு என்பதால் ஸ்ருதி மீது என்ன தவறு? என்ன நடந்தது என தெரிந்து கொள்ளும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: