• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5: வைல்ட் கார்டு எண்ட்ரி கொடுத்த விஜய் நண்பர் சஞ்சீவ்

Bigg Boss Tamil 5: வைல்ட் கார்டு எண்ட்ரி கொடுத்த விஜய் நண்பர் சஞ்சீவ்

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

Bigg Boss Promo: மாஸ்டர் பட பாடல் பின்னணியில் ஒலிக்க மாஸாக என்ட்ரி கொடுத்தார் சஞ்சீவ் வெங்கட்.

  • Share this:
    பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 52 நாட்களை கடந்துவிட்ட நிலையில், 53 நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. நேற்று வரை வீட்டில் உள்ளவர்களுக்கு கனா காணும் காலங்கள் டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று, வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு புதிதாக டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, வீட்டில் என்ன நடந்தாலும் அதை போட்டியாளர்கள் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும் என்பது தான்.

    மீறி வீட்டில் நடக்கும் விஷயத்திற்கு ரியாக்ட் செய்தால் அவர்கள் நேராக எவிக்ஷன் ப்ரோஸஸுக்கு அனுப்பப்படுவார்கள் என பிக்பாஸ் டாஸ்க் கொடுத்திருந்தார். இதையடுத்து இடி மின்னல் சத்தங்கள் வீட்டில் எழுப்பப்படுகிறது. அதனைக் கண்டுகொள்ளாமல் போட்டியாளர்கள் அவரவர் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சிலர் வந்து வீட்டுக்குள் நுழைத்து கேக் வைத்துவிட்டு போகின்றனர். வீட்டில் இருந்த கூடைகளை எடுத்து செல்வது போல இருக்கிறது. அப்போது தான் உள்ளே யாரோ வருகிறார்கள் என அவர்களுக்கு தெரிகிறது. பிரியங்கா யாரோ வருகிறார் எனக் கூறுகிறார். அவர்கள் ஓடிச்சென்று பார்க்க கதவு திறக்கிறது.

    முதல் ப்ரோமோவின் தொடர்ச்சியாக வெளியான 2-வது ப்ரோமோவில், யார் வரப்போவது என ஆவலுடன் எதிர்பார்த்து மெயின் டோரை பார்த்தபடி பிக்பாஸ் போட்டியாளர்கள் நிற்கின்றனர். மாஸ்டர் பட பாடல் பின்னணியில் ஒலிக்க மாஸாக என்ட்ரி கொடுத்தார் சஞ்சீவ் வெங்கட். அவரை கண்டவுடன் பிரியங்கா வேகமாக சென்று கட்டியணைத்து வரவேற்கிறார். மேலும், மற்ற யாரும் பெரிதாக ரியாக்ஷன் கொடுக்காமல் இருக்கவும் சஞ்சீவ் என்ன என்று கேட்கிறார். உடனே ரியாக்ட் பண்ண கூடாது என்று பிக்பாஸ் டாஸ்க் கொடுத்திருக்கிறார் என வருண் தெரிவிக்க, சரி இப்போவாவது ரியாக்ட் பண்ணலாமே என்று சஞ்சீவ் கூறுகிறார். உடனே போட்டியாளர்கள் சத்தமிடுகின்றனர்.

    மேலும் "அண்ணாச்சி" என்று சத்தமிட்டு அண்ணாச்சி வந்தா தான் உள்ளே வருவேன் என்கிறார் சஞ்சீவ். ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் அண்ணாச்சியை அழைத்து வருகின்றனர். இதற்கடுத்ததாக சீசன் எப்படி சென்று கொண்டிருக்கிறது என ஹவுஸ்மேட்ஸ் கேட்டதற்கு, எல்லா சீசனை போலவே இந்த சீசனும் நன்றாக சென்று கொண்டிருக்கிறது என சஞ்சீவ் தெரிவிக்கிறார். உடனே அங்கிருந்த சிபி, விஜய் சார் பிக்பாஸ் பார்க்கிறாரா? என்று கேட்டவுடன், சிறிய புன்சிரிப்புடன் சஞ்சீவ் தலையசைக்கிறார். அதோடு ப்ரோமோ முடிகிறது.



    கடந்த வாரத்தில் இருந்து இதுவரை 3 போட்டியாளர்கள் வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்துள்ளனர். அதில் ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட அபிஷேக் மீண்டும் என்ட்ரி கொடுத்திருந்தார். இதையடுத்து டான்ஸ் மாஸ்டர் அமீர் நுழைத்திருந்தார். இவர்களை தொடர்ந்து 3-வது வைல்ட் கார்டு போட்டியாளராக சஞ்சீவ் நுழைந்திருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: