• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஹீரோ மாதிரி சூப்பரா கலக்குறீங்க... சஞ்சீவ் யாரைப் பற்றி கூறினார் தெரியுமா?

ஹீரோ மாதிரி சூப்பரா கலக்குறீங்க... சஞ்சீவ் யாரைப் பற்றி கூறினார் தெரியுமா?

சஞ்சீவ்

சஞ்சீவ்

ராஜூவை பார்த்து பேசிய சஞ்சீவ், "இவர் இந்த கேமை ஒரு அழகான மீட்டரில் விளையாடி கொண்டிருக்கிறார்" என்று குறிப்பிட்டார்,

  • Share this:
    பிக்பாஸ் வீட்டில் 53-ம் நாளான இன்று வைல்ட் கார்டு போட்டியாளராக சஞ்சீவ் வெங்கட் நுழைந்திருக்கிறார். வெளியான முதல் ப்ரோமோவில் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு புதிய டாஸ்க் வழங்கப்படுகிறது. வீட்டில் என்ன நடந்தாலும் அதை போட்டியாளர்கள் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும்.

    மீறி வீட்டில் நடக்கும் விஷயத்திற்கு ரியாக்ட் செய்தால் அவர்கள் நேராக எவிக்ஷன் ப்ராஸஸுக்கு அனுப்பப்படுவார்கள் என பிக்பாஸ் டாஸ்க் கொடுத்திருந்தார். அதன்படி போட்டியாளர்கள் வீட்டில் நடக்கும் விஷயங்களுக்கு ரியாக்ஷன் கொடுக்காமல் இருந்தனர். சிலர் வந்து வீட்டுக்குள் நுழைத்து கேக் வைத்துவிட்டு போகின்றனர்.திடீரென, பிக்பாஸ் வீட்டில் மெயின் டோர் ஓபன் ஆக, யாரோ வருகிறார் என ஹவுஸ்மேட்ஸ் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

    இதனையடுத்து வெளியான 2-வது ப்ரோமோவில் தான் சஞ்சீவ் வெங்கட் என்ட்ரி கொடுக்கிறார். மாஸ்டர் பட பாடல் பின்னணியில் ஒலிக்க மாஸாக என்ட்ரி கொடுத்தார் சஞ்சீவ் வெங்கட். அவரை கண்டவுடன் பிரியங்கா வேகமாக சென்று கட்டியணைத்து வரவேற்கிறார். சஞ்சீவை பார்த்ததும் சீசன் எவ்வாறு சென்று கொண்டிருக்கிறது எனத் தெரிந்துகொள்ள போட்டியாளர்கள் ஆர்வமாக இருந்தனர். சிபி, விஜய் சார் பிக்பாஸ் பார்க்கிறாரா? என்று கேட்டவுடன், சிறிய புன்சிரிப்புடன் சஞ்சீவ் தலையசைக்கிறார்.

    இதனைத்தொடர்ந்து, வீட்டிற்குள் புதிதாக நுழைந்திருக்கும் சஞ்சீவ் வெங்கட்டுடன் அனைத்து ஹவுஸ்மேட்ஸ்களும் டைனிங் ஏரியாவில் அமர்ந்து பேசுவது போல 3வது ப்ரோமோ அமைந்துள்ளது. அதில், ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸ் பற்றியையும் தனக்கு உள்ள கருத்தை சஞ்சீவ் வெளிப்படுத்துகிறார். முதலில் வருணை பார்த்து பேசிய அவர், என்னோட ஒப்பீனியன் படி முதல் வாரம் மிகவும் அமைதியாக இருந்த வருண், பொங்கி எழுந்து ஒரு ஹீரோ மாதிரி சூப்பரா கலக்கிட்டுவர்றீங்க. அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று கூறினார். பிறகு அக்ஷராவை பார்த்து புரியாத புதிர் தான் அக்ஷரா என்று சொல்கிறார்.



    பின்னர் பிரியங்கா பற்றி கூறிய சஞ்சீவ், "என்ன பாக்குற மாதிரி ஒரு கேரக்டர் தான் நீ, கொஞ்சினா கொஞ்சறது, மிஞ்சினா மிஞ்சறது. அடிக்கணும்ன்னா அடிச்சிக்கலாம் வா என்ற கேரக்டர் தான் நீ"என்று கூற, பிரியங்காவும் சிரித்துக்கொண்டே தலையாட்டியபடி கேட்டுக்கொள்கிறார். பின்னர் ராஜூவை பார்த்து பேசிய சஞ்சீவ், "இவர் இந்த கேமை ஒரு அழகான மீட்டரில் விளையாடி கொண்டிருக்கிறார். ஆனா ஆட்டோ மீட்டர் மாதிரி, எந்த ஒரு மீட்டரும் சூடு புடிச்சா பாஸ்ட்டா ஓடும். அந்த மாதிரி ராஜு மீட்டருக்கும் சூடு பிடிக்கும்." என்று கூறுகிறார். அதோடு ப்ரோமோ முடிவடைகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: