Home /News /entertainment /

Bigg Boss Tamil 5: மகளின் ஆசையை நிறைவேற்றிய சஞ்சீவ்!

Bigg Boss Tamil 5: மகளின் ஆசையை நிறைவேற்றிய சஞ்சீவ்!

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்த தாமரையின் குடும்பம் இன்று பிக் பாஸ் வீட்டுக்கு வருகை தந்துள்ளது.

    18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் அமீர், சஞ்சீவ் வைல்டு கார்டு எண்ட்ரியாக வருகை தந்தனர். இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை 10 பேர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் தற்போது பிரியங்கா, ராஜு, பாவ்னி, வருண், அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி, நிரூப், சஞ்சீவ் மற்றும் அமீர் ஆகிய 10 போட்டியாளர்கள் உள்ளனர்.

    பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஃபிரீஸ் டாஸ்க் நடைப்பெற்று வருகிறது. ஒவ்வொரு பிக் பாஸ் சீசனிலும் இந்த டாஸ்கை ரசிகர்களும் சரி, போட்டியாளர்களும் சரி மிகவும் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டுக்குள் வருவது பலராலும் ரசிக்கப்படும் ஒன்று. கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக தங்கள் குடும்பத்தை பார்க்காமல் இருக்கும் போட்டியாளர்களின் அம்மா, அப்பா, மனைவி, நண்பர்கள் என உறவுகளைப் பார்க்கும் போது, பாசத்தில் அழுது தீர்ப்பார்கள். சில நேரங்களில் போட்டியாளர்களின் அழுகை, ரசிகர்கள் கண்களிலும் கண்ணீரை வர வைத்து விடும் அளவுக்கு நெகிழ்வாக இருக்கும்.

    இதுவரை அக்ஷ்ரா, சிபி, நிரூப், ராஜு, நிரூப், வருண், பிரியங்காவின் குடும்பத்தினர் வருகை தந்துள்ளனர். இந்த நிலையில் இன்று சஞ்சீவின் குடும்பத்தினர் வருவது இன்று வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் தெரிகிறது. அதில் சஞ்சீவினி மகள், மகன் மற்றும் அவரது மனைவி வருகின்றனர். அதனை பார்த்து சஞ்சீவ் அழும் காட்சிகள் உள்ளது. மேலும் தனது மகளை பார்த்து நீ சந்தோசமாக இருக்கிறாயா? பிக் பாஸ் வீட்டிற்குள் வர வேண்டும் என ஆசைப்பட்டாய் அல்லவா எனக் கேட்டு அவருக்கு முத்தம் கொடுக்கும் கியூட் காட்சிகள் உள்ளது.

    முன்னதாக இன்று வெளியான முதல் இரண்டு ப்ரோமோக்களில், பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்த தாமரையின் குடும்பம் இன்று பிக் பாஸ் வீட்டுக்கு வருகை தரும் காட்சிகள் இருந்தது. ஏற்கனவே முதல் மகனைப் பிரிந்திருக்கும் தாமரையின் குடும்பத்தில் இருந்து யார் வருவார் என்பது பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்தநிலையில் இன்று துறுதுறுப்பான தாமரையின் மகன் வரும் காட்சிகள் முதல் புரோமோவில் வெளியாகி ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.



    இரண்டாவது புரோமோவில், தாமரையின் கணவர் வருகை தருகிறார். அப்போது மிகவும் இயல்பாக அனைவரோடும் பழகிய தாமரையின் கணவர், அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். “உங்க எல்லாராலையும் தான் தாமரை இவ்ளோ தூரம் வந்துருக்கா” என அனைவரிடமும் கூறினார். அதே போல தாமரையிடமும், ‘அதிகமாக கோவப்படாத, கோவத்தை கட்டுப்படுத்து’ என்றும் அட்வைஸ் செய்துள்ளார். தாமரையின் மகன் கொண்டு வந்த பூவை அவரின் கணவர் தாமரைக்கு வைத்து விடும் காட்சிகளும் உள்ளது. இன்றைய எபிசோடு உணர்ச்சி பூர்வமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அனைவரது குடும்பமும் வந்துவிட்ட நிலையில் அமீரின் குடும்பத்தினர் எப்போது வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5

    அடுத்த செய்தி