Home /News /entertainment /

மனைவி, அம்மாவைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்ட ராஜூ - வைரல் வீடியோ!

மனைவி, அம்மாவைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்ட ராஜூ - வைரல் வீடியோ!

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், ராஜுவின் மனைவி வருகிறார். அவரை முத்தமிட்டு ராஜு வரவேற்கிறார்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
    விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி யின் 5-வது சீசன் தொடங்கி வெற்றிகரமாக 80-வது நாளை எட்டியுள்ளது. இறுதிக்கட்டத்தை நோக்கி செல்லும் இந்த நிகழ்ச்சியில் தற்போது பிரியங்கா, ராஜு, பாவ்னி, வருண், அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி, நிரூப், சஞ்சீவ் மற்றும் அமீர் ஆகிய 10 போட்டியாளர்கள் உள்ளனர்.

    இந்தவார தலைவராக தாமரை வெற்றி பெற்றுள்ளார். மேலும் இந்தவார நாமினேஷன் லிஸ்டில், பிரியங்கா, வருண், நிரூப், அக்ஷரா, பாவ்னி ஆகியோர் உள்ளனர். இந்தநிலையில் இந்த வார லக்ஸரி டாஸ்காக ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கியுள்ளது. இதில் ஃப்ரீஸ், ரிலீஸ், லூப், ரீ வைண்ட் போன்ற வார்த்தைகள் நிறைய இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த டாஸ்கில் முதலில் அக்ஷ்ராவின் குடும்பத்தினர் வருகை தந்துள்ளனர்.

    நேற்றைய நிகழ்ச்சியில் அக்ஷ்ராவின், அண்ணா மற்றும் அம்மா வந்தனர். இருவரையும் கட்டிப்பிடித்து அக்ஷ்ரா அழுதார். இதனை தொடர்ந்து "நானும் உங்க அம்மா மாதிரிதான்” என்று பிரியங்கா, தாமரை, பாவனி ஆகியோரையும் அக்ஷராவின் அம்மா அணைத்து கொண்டது சிறப்பான காட்சியாக இருந்தது. பின்னர் அக்ஷராவிற்கு அட்வைஸ் செய்த அவரது அண்ணன், குடும்பம் இல்லாமல் ஏறத்தாழ எண்பது நாட்களை நீ கடந்து விட்டாய், இதுவே உனது வெற்றி தான் என பாராட்டினார். மேலும் யார் மேலயும் வெறுப்பை வளர்த்துக்காதே இது ஒரு விளையாட்டு தான் என கூறினார்.

    இதனை தொடர்ந்து சிபியின் அப்பா வருகை தந்தார். அவரை வரவேற்ற சக ஹவுஸ் மேட்ஸ் ஜாலியாக பேசி கொண்டிருந்தனர். அவர் மட்டும் தான் வந்திருப்பதாக எதிர்பார்த்த நிலையில், கன்பெக்ஷன் அறையில் இருந்து சிபியின் மனைவி வந்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத சிபி, அவரை கட்டியணைத்து மகிழ்ச்சியடைந்தார்

    பின்னர் அனைவரும் ஒன்றாக ஜாலியாக பேசி கொண்டிருந்தனர். அப்போது “ரேங்கிங் டாஸ்க்கில் நீ சிறப்பாக விளையாடினாய். எனக்குப் பெருமையாக இருந்தது" என சிபியின் மனைவி கூறினார். பின்னர் என்னால அவரைத் தூக்க முடியும். அவரால் என்னைத் தூக்க முடியாது என்று சிபியின் மனைவி ஜாலியாக சவால் விட்டு அதை செய்தும் காட்டினார்.



    இந்தநிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், ராஜுவின் மனைவி வருகிறார். அவரை முத்தமிட்டு ராஜு வரவேற்கிறார். அவரை தொடந்து அவரது அம்மாவும் வரும் நிலையில், அவரை கண்ணீருடன் ராஜு கட்டியணைத்து கொள்ளும் காட்சிகள் உள்ளது.

    முன்னதாக இன்று வெளியான முதல் ப்ரோமோவில், நிரூப்பின் அப்பா பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார். இவனுக்காக தான் பிக் பாஸே பாக்க ஆரம்பிச்சேன்மா என்ற அவர், ஒவ்வொருத்தரைப் பற்றியும் தனது கருத்தை தெரிவிக்கிறார். இதை போட்டியாளர்கள் அனைவரும் அமைதியாக கேட்டுக் கொள்கிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil 5

    அடுத்த செய்தி