• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5: அக்‌ஷராவிடம் பிரியங்காவை கோர்த்து விடும் ராஜூ!

Bigg Boss Tamil 5: அக்‌ஷராவிடம் பிரியங்காவை கோர்த்து விடும் ராஜூ!

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

Bigg Boss Tamil 5 Promo: மூன்றாவது ப்ரோமோவில், பிரியங்கா குறித்து ராஜு பேசிய மேலும் சில காட்சிகள் உள்ளது.

  • Share this:
    பிக் பாஸ் நிகழ்ச்சியில் குறைந்த வாக்குகள் பெற்றவர்களை வெளியேற்றுவது வழக்கம். அந்த வகையில் ஒவ்வொருவராக வெளியேற தற்போது இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், பிரியங்கா, அபினய் வாடி, பாவ்னி, வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 12 போட்டியாளர்கள் உள்ளனர்.

    இதில் தினமும் டாஸ்குகள் வழங்கப்படுவது வழக்கம். நேற்றைய நிகழ்ச்சியில் ’உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி’ என்ற டாஸ்க் வழங்கப்பட்டது. அதில், போட்டியாளர்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு, டீம் ஏ கண்ணாடியாக மாறி, டீம் பி-யினரை பிரதிபலிக்க வேண்டும் என பிக் பாஸ் அறிவித்தார். அதன்படி சிபி- அக்‌ஷராவின் கண்ணாடியாகவும், இசைவாணி - இமான், பாவ்னி - ராஜு , பிரியங்கா - தாமரை, ஐக்கி - வருண், நிரூப் - அபினய் கண்ணாடியாகவும் பிரியுமாறு அறிவிக்கப்பட்டது.

    அதன்படி ஒவ்வொருவரும் தங்களது டீம் நபர் போல பேச்சு, நடை, உடை, பாவனை என பின்னி பெடலெடுத்தனர். இதனை தொடர்ந்து லிங்கிங் எரியாவில் ஜோடிகளாக பிரிக்கப்பட்ட இருவரும் கைக்கோர்த்து சேர்ந்து நின்று ஒருவர் பற்றிய கருத்துக்களை சொல்ல வேண்டும் என்றும் டாஸ்கில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    நேற்று அபினய் குறித்து நிரூப் மற்றும் இமான் குறித்து இசைவாணியும் பேசினார். இந்த நிலையில் இன்றும் ‘உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி டாஸ்க்’ இன்றும் தொடர்கிறது இன்று வெளியான முதல் இரண்டு ப்ரோமோக்களில் உறுதி ஆகியுள்ளது. அதில், நேற்றிருந்த ஜோடிகள் அனைத்தும் இன்று மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, அபினய் - சிபியின் கண்ணாடியாகவும், இமான் - ஐக்கியின் கண்ணாடியாகவும், வருண் - நிரூப்பின் கண்ணாடியாகவும், ராஜு - பிரியங்காவின் கண்ணாடியாகவும் பிரதிபலிக்க வேண்டும் என பிக் பாஸ் அறிவிக்கிறார்.

    இதில் பிரியங்கா குறித்த கருத்துக்களை ராஜு கூறுகிறார். அப்போது, பாவ்னி உங்களை ஏத்தி விடுகிறார், நீங்கள் அமைதியாக இருங்கள் என ராஜு கூறுகிறார். இதன் தொடர்ச்சியாக இரண்டாவது ப்ரோமோவில், நீங்கள் என்னைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என என்னிடம் தெளிவாக கூறுங்கள் என ராஜுவிடம், பாவ்னி கோவமாக கேட்கும் காட்சிகள் இருந்தது.



    இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், பிரியங்கா குறித்து ராஜு பேசிய மேலும் சில காட்சிகள் உள்ளது. பிரியங்கா யாரென்றால்? நீங்க அனைத்து விளையாட்டு மற்றும் டாஸ்குகளில் என்னை போலவே ஒரு பேக்காக இருப்பதை பார்த்து நான் ரொம்ப பீல் பண்ணி இருக்கேன், ஆனால் உங்களிடம் கூறியதில்லை என்கிறார். மேலும் அக்ஷ்ரா மீது உங்களுக்கு ஏதோ ஒரு காண்டு இருக்க மாதிரி எனக்கு தோன்றுகிறது, "நீ என்ன டி பெரிய இவ, நான் பாருடி" என கூற முடியாது, எனினும் உங்கள் நடவடிக்கைளில் இருந்து தெரிகிறது என கூறும் காட்சிகள் உள்ளது. இதனால் இன்று ராஜூவை, பிரியங்கா வச்சு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: