• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ராஜு சொன்ன கதையைக் கேட்டு அலறிய தாமரைச்செல்வி! - பிக் பாஸ் ப்ரோமோ!

ராஜு சொன்ன கதையைக் கேட்டு அலறிய தாமரைச்செல்வி! - பிக் பாஸ் ப்ரோமோ!

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

ஒரு கதை சொல்லு ராம் என்று குரல் ஒலிக்க, ராஜு கதை சொல்கிறார்.

  • Share this:
    பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்தடுத்த ப்ரோமோக்கள் வெளியாகி இன்றைய நிகழ்ச்சியின் ஆர்வத்தை கூட்டியிருக்கின்றன.

    நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் துவக்க விழா நடந்தது. முன்பை விட அதிகமான போட்டியாளர்கள் இந்த சீசனில் இடம்பெற்றுள்ளனர். 18 போட்டியாளர்களைக் கொண்ட பிக் பாஸ் 5 நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோவில், யாரெல்லாம் கேப்டனாகும் தகுதி தங்களுக்கு இருக்கிறதென்று நினைக்கிறீர்கள் என்கிறார் பிக் பாஸ்.

    அப்போது ராஜு, சின்னப்பொண்ணு, நமீதா, பாவனி, நிரூப் ஆகியோர் எழுந்து நிற்கிறார்கள். அப்போது யார் யார் எந்த அணிக்கு கேப்டனாக ஆசைப்படுகிறீர்கள் என பிக் பாஸ் கேட்க, ’நான் பத்ரூம் க்ளினிங் அணிக்கு கேப்டனாகலாம் என்று நினைக்கிறேன்’ என்று கூறுகிறார் ராஜு. அதனைக் கேட்ட மற்ற போட்டியாளர்கள் சிரிக்கிறார்கள். அப்போது நாங்கல்லாம் ஒன்னானோம்... கக்கூஸ் கழுவி ஃபிரண்டானோம் என கோஷம் போடுகிறார் பிரியங்கா.



    இரண்டாவது ப்ரோமோவில், பிக் பாஸிடம் இருந்து அறிக்கை வந்திருக்கிறது. அதைப் படிக்கிறார் ராஜு. ‘பிக் பாஸின் விதிமுறைகளில் ஒன்று. போட்டியாளர்கள் அனைவரையும் படமெடுக்கப்படுவது, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். பாத்ரூம் மற்றும் டாய்லெட்டில் கேமரா பொருத்தப்படவில்லை. சாதனங்களை சேதப்படுத்தக் கூடாது’ என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது, இதைக் கேட்ட போட்டியாளர்கள் கிண்டல் செய்து சிரித்துக் கொள்கிறார்கள்.



    மூன்றாவது ப்ரோமோவில், ராஜு அனைவருக்கும் கதை சொல்கிறார். ஒரு கதை சொல்லு ராம் என்று குரல் ஒலிக்க, ராஜு கதை சொல்கிறார். ’ஊர் பஞ்சாயத்து தலைவர் வீட்டுக்கதவை தட்டி, எங்க அம்மா கையில ஒரு மோதிரம் இருந்துச்சே அது எங்கன்னு கேட்டேன்’ என்கிறார். இதற்கு அம்மா செத்தத பத்தி எல்லாம் கவலை இல்லையா என்று தாமரை செல்வி கிண்டலாக கேட்கிறார்.



    தொடர்ந்து பேசிய ராஜு, கை விரலை அப்படி இப்படி ஆட்டி ஒடச்சி, அந்த மோதிரத்தை எடுத்துட்டு புதைச்சிட்டு போய்டுறாங்க... பாட்டிக்கிட்ட என்ன பாட்டி விரலைக்காணும்னு கேட்க... நீ தானே ஒடச்சே என்று கூறியதாகக் கூறுகிறார். இதைக்கேட்ட தாமரைச்செல்வி அலறுகிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: