ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக் பாஸ் வீட்டில் ராஜு கற்றுக் கொண்டது என்ன தெரியுமா?

பிக் பாஸ் வீட்டில் ராஜு கற்றுக் கொண்டது என்ன தெரியுமா?

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ராஜு முக்கிய போட்டியாளராக கருதப்படுகிறார். தனது நகைசுவை உணர்வு மற்றும் திறமையால் எண்ணற்ற ரசிகர்களை கவர்ந்த ராஜு டைட்டில் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 5, தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இறுதி கட்ட போட்டியில், ராஜு ஜெயமோகன், பிரியங்கா, பாவ்னி, தாமரை செல்வி, சிபி, நிரூப், சஞ்சீவ் மற்றும் அமீர் ஆகிய 8 போட்டியாளர்கள் உள்ளனர்.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் டிக்கெட் டு பினாலே டாஸ்க் பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் வெற்றிபெறும் நபர் நேரடியாக பைனலுக்கு செல்வார் என்பதால் இறுதிக்கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. மூன்று கட்டங்களாக நடைபெற்றுள்ள இந்த போட்டியில் இருந்து இதுவரை நிரூப், தாமரை, பாவ்னி, ராஜு, பிரியங்கா மற்றும் சஞ்சீவ் வெளியேறியுள்ளனர்.

இதனால் தற்போது அமீர் மற்றும் சிபி டிக்கெட் டு பினாலேவின் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர். இன்றைய நிகழ்ச்சியில் இவர்கள் இருவருக்கும் டாஸ்க் வழங்கப்பட்டு இதில் ஒருவர் வெற்றி பெறுவார். வெற்றி பெறும் நபர் இறுதி போட்டிக்கு செல்லும் முதல் நபராக இருப்பார் என்பதால் அது யார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் இந்த பரபரப்புகளுக்கு இடையே பிக் பாஸ் வீட்டில் தாங்கள் கற்றுக்கொண்டது என்ன என்பது குறித்து பேசும் டாஸ்க் வழங்கப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் இதுகுறித்து பேசும் ராஜு, எங்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும் நான் பேச வேண்டும் என இங்கு கற்றுக்கொண்டேன் என்கிறார். தினமும் என அம்மாவிடம் கால் செய்து பேசுவேன், ஆனால் சாப்டியா? என கேட்டால் சாப்பிட்டேன் என முடித்து கொள்வேன், அவர் மனதில் என்ன நினைக்கிறார் என கேட்டதில்லை என்கிறார்.

மேலும் வீட்டில் உள்ள அனைவருக்கும் சமமான கவனம் இருக்க வேண்டும் என்பதை கற்றுக்கொண்டேன் என கூறும் காட்சிகள் உள்ளது. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ராஜு முக்கிய போட்டியாளராக கருதப்படுகிறார். தனது நகைசுவை உணர்வு மற்றும் திறமையால் எண்ணற்ற ரசிகர்களை கவர்ந்த ராஜு டைட்டில் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளது.

முன்னதாக இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில் பேசிய பிரியங்கா,நான் எமோஷனலான நபர் என்பது எனக்கு தெரியும், "ஒரு விஷயம் உன்னுடையதாக இருந்தால் அது கண்டிப்பாக உன்னிடம் தான் இருக்கும், அது உன்னுடையது இல்லை என்றால் அப்படியே ப்ரீயாக விட்டுவிட வேண்டும். அது திரும்ப உன்னிடம் வந்தால் அது உன்னுடையது, வரவில்லை என்றால் உன்னுடையது அல்ல" என்பதை நான் தெரிந்து கொண்டேன் என பேசுகிறார். இதன்மூலம் நிரூப் மற்றும் தாமரை குறித்து பிரியங்கா பேசுவது தெளிவாக தெரிகிறது. ஆரம்பத்தில் தாமரை மற்றும் நிரூப் இருவரும் பிரியங்காவுடன் நெருக்கமாக இருந்த நிலையில் தற்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Bigg Boss Tamil 5