• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5 - நாமினேஷனில் பிரியங்கா மற்றும் ராஜூவை டார்கெட் செய்யும் சக போட்டியாளர்கள்!

Bigg Boss Tamil 5 - நாமினேஷனில் பிரியங்கா மற்றும் ராஜூவை டார்கெட் செய்யும் சக போட்டியாளர்கள்!

பிக்பாஸ்

பிக்பாஸ்

Bigg Boss Tamil 5: பிக் பாஸ் மூன்றாவது ப்ரோமோவில், இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெறுகிறது.

  • Share this:
    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஐந்தாவது சீசன் 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர். இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு அடுத்தடுத்த வாரங்களில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

    கடந்த வாரம் நாமினேஷனில் அபினய், இசைவாணி, சுருதி, பாவ்னி, சிபி, அக்ஷரா, ஐக்கி மற்றும் நிரூப் ஆகியோர் இருந்த நிலையில் இவர்களில் ஸ்ருதி வெளியேற்றப்பட்டுள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற பஞ்சதந்திரம் டாஸ்கில், தாமரை உடை மாற்றிய போது அவரது நாணயத்தை ஸ்ருதி திருடியதால் பிரச்னை ஏற்பட்டது. இந்த பிரச்சனைதான் ஸ்ருதி வெளியேறியதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும் ஸ்ருதியிடம் நாணயம் இருந்ததால் அவர் நினைத்திருந்தால் நாமினேஷனில் இருந்து தன்னை விடுவித்திருக்க முடியும். ஆனால் பிக் பாஸ் அந்த வாய்ப்பை கொடுத்தும் அதனை ஸ்ருதி பயன்படுத்தாமல் வீணடித்து வெளியேறியுள்ளார், மேலும் தற்போது அந்த நாணயத்தை வேறு யாரும் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிகழ்ச்சியில் தற்போது இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, பிரியங்கா, அபினய் வாடி, பாவனி, வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 13 போட்டியாளர்கள் உள்ளனர். இந்தநிலையில் இன்று திங்கட்கிழமை என்பதால் இந்த வாரத்திற்கான தலைவர் பதவி டாஸ்க் நடைபெறும் காட்சிகள் இன்றைய முதல் ப்ரோமோவில் இருந்தது. இந்த போட்டியில் 7 பொம்மைகள் வைக்கப்பட்டு, கூடவே தலைவருக்கு போட்டியிடுபவர்களின் படங்கள் மற்றும் மண்பானை இணைக்கப்பட்டிருக்கின்றன. யார் தலைவராக வேண்டாம் என நினைக்கிறார்களோ அவர்களின் பொம்மை தலையில் இருக்கும் மண் பானையை உடைக்க வேண்டும் என கூறப்படுகிறது. இதனால் ஏற்படும் பிரச்சனைகள் இரண்டாவது ப்ரோமோவில் இருந்தது. அதில் நிரூப் - அபினய் இடையே வாக்குவாதம் நடைபெறுகிறது. வீட்டின் தலைவராகும் நபரை யாரும் நாமினேட் செய்ய முடியாது என்பதால் இந்த டாஸ்க் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதுவரை தாமரை, சிபி, வருண், மதுமிதா ஆகியோர் தலைவராகி உள்ள நிலையில், இந்த வாரம் யார் தலைவராவார் என்பது இன்று தெரியவரும்.



    இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெறுகிறது. அதில் பிரியங்கா, பாவ்னி, அபினய், நிரூப் ஆகியோர் ராஜூவை நாமினேட் செய்கின்றனர். அதில் ராஜு பாரபட்சம் பார்ப்பதாகவும் , இன்னும் முழுமையாக விளையாடவில்லை என்ற காரணங்கள் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ராஜு, இமான் அண்ணாச்சி ஆகியோர் பிரியங்காவை நாமினேட் செய்கின்றனர். சிறிய விஷயத்திற்கு கூட சண்டை போடுவதாகவும், தான் பேசுவது தான் நியாயம் என்பது போல பேசுகிறார் என்றும் பிரியங்காவை கூறுகின்றனர். இதனால் பிரியங்கா மற்றும் ராஜு இந்தவார நாமினேஷன் லிஸ்டில் இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் நாமினேஷன் லிஸ்டில் இருப்பவர்கள் முழு விவரமும் இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: