• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சின்ன பொண்ணிற்கு அட்வைஸ் செய்யும் ராஜு - கொளுத்தி போடும் பிக் பாஸ்!

சின்ன பொண்ணிற்கு அட்வைஸ் செய்யும் ராஜு - கொளுத்தி போடும் பிக் பாஸ்!

ராஜு - சின்னப்பொண்ணு

ராஜு - சின்னப்பொண்ணு

முன்னதாக இன்று காலை வெளியான முதல் ப்ரோமோவில், ஹவுஸ்மேஸுக்கு பிக்பாஸ் கடந்து வந்த பாதை

  • Share this:
    விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

    நேற்றைய முதல் நாள் நிகழ்ச்சியில் அணிகள் பிரிக்கப்பட்டது. அதில் ராஜு, நமீதா, பாவனி, சின்ன பொண்ணு ஆகியோர் தலைவர்களாக இருக்கின்றனர். தற்போது முதல் வாரம் என்பதால் விருப்பத்தின் அடிப்படையில் இந்த தேர்வு நடைபெற்றது. இதனை தொடந்து அனைவரும் தங்களது பணிகளை முடித்துவிட்டு பேசி கொண்டிருந்த காட்சிகள் இருந்தது. அதில் ராஜு , தாமரை செல்வி, ஐக்கி, அக்சரா, வருண் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அப்போது ராஜு பேய் கதை கூறி தாமரை செல்வியை பயமுறுத்தினார். இதனால் நிகழ்ச்சி கலகலப்பாக சென்றது.



    இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், பேசும் ராஜு, கலைஞர்கள் யாரும் தங்களது கஷ்டத்தை காட்டாமல் முன்னுக்கு வருவதில்லை, ஆனால் நாம் சிரிக்க மட்டும் தான் செய்ய வேண்டும். இது நம் கஷ்டத்தை சொல்லி தான் ஆக வேண்டும் என்ற மேடை தான், இருந்தாலும் உங்கள் வாழ்க்கையை கதையாக பண்ணவில்லை. அனைவரும் சூப்பர் என கைகொடுத்தால் நாம் வளர மாட்டோம். நடுவில் ஒரு சுவர் இருந்தால் தான் அதனை உடைக்க நினைப்போம், இதனை நீங்கள் உடைத்து மேலே வர வேண்டும் என கூறுகிறார். அப்போது சின்ன பொண்ணுவிடம் சிலர் கோபம் இல்லையே என கேட்கின்றனர். எனவே சின்னப்பொண்ணு தனது கஷ்டத்தை கூறியது குறித்து ராஜு பேசுவது தெரிகிறது. பிக் பாஸ் கொளுத்தி போடும் வேலையை தொடங்கி இருப்பது இந்த ப்ரோமோவின் மூலம் உறுதியாகியுள்ளது.

    முன்னதாக இன்று காலை வெளியான முதல் ப்ரோமோவில், ஹவுஸ்மேஸுக்கு பிக்பாஸ் கடந்து வந்த பாதை டாஸ்க் கொடுத்துள்ளது தெரிகிறது. அதில் பேசும் இசைவாணி, தனது அப்பா துறைமுகத்தில் பணியாற்றியதாக கூறுகிறார். தனது அப்பாவுக்கு வேலை போனதும், சம்பளம் இல்லாமல் வீட்டிற்கு வாடகை கூட கொடுக்க முடியாமல் போனதாகவும், வீடு இல்லாமல் ஒவ்வொரு வீடாக விரட்டினார்கள் என கண்ணீர் விட்டப்படியே கூறுகிறார்.

    மேலும் தனக்கு நிறைய டிரெஸ் போட வேண்டும் என்று ஆசை என்றும் ஆனால் போட்டுக்கொள்ள கூட டிரெஸ் இருக்காது,, தனது வீட்டில் ஒரு வேலைதான் சாப்பாடு இருக்கும் என்றும் அதையும் தனது அப்பா, தான் சாப்பிட வேண்டும் என்று வைத்து விடுவார் என்றும் கூறி மற்றவர்களையும் கண்ணீர் விட வைத்துள்ளார். இறுதியாக நாம் கஷ்டப்படுவதை இப்படி கஷ்டப்படுறோமேன்னு நினைக்காதீங்க என்னைக்காவது ஒரு நாள் நம்ம லைஃப் மாறும் என கூறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: