ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக் பாஸ் வீட்டை ராஜு படமாக எடுத்தால் அதில் சிபி தான் ஹீரோ... ஆனால் ஹீரோயின்?

பிக் பாஸ் வீட்டை ராஜு படமாக எடுத்தால் அதில் சிபி தான் ஹீரோ... ஆனால் ஹீரோயின்?

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் பிக் பாஸ் ரேடியோ ஸ்டேஷனின் ஆர்ஜே-வாக இருக்கும் சிபி ராஜுவிடம் ஒரு கேள்வி கேட்கிறார்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  பிக்பாஸ் சீசன் - 5 நிகழ்ச்சி தற்போது 100 நாட்களை கடந்த நிலையில் இறுதி நாட்களை நெருங்கி கொண்டிருக்கிறது. கடந்த வாரம் தாமரை வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் ராஜு, பிரியங்கா, அமீர், நிரூப், பாவனி ஆகியோர் பைனலிஸ்டுகளாக உள்ளனர்.

  இவர்களுக்கு இந்த வாரம் பெரிதாக டாஸ்க் வழங்கப்படவில்லை. இந்நிலையில் 101ம் நாளான இன்று காலை வந்த முதல் ப்ரோமோவில் பிக்பாஸ் 5வது சீசனின் பழைய போட்டியாளர்கள் வீட்டிற்கு வருகிறார்கள். அவர்களை கண்ட அந்த ஐந்து போட்டியாளர்களும் மகிழ்ச்சியில் கத்தி அவர்களை பிக் பாஸ் வீட்டிற்கு மீண்டும் வரவேற்கின்றனர். குறிப்பாக இந்த ப்ரோமோவில், நாடியா சங் மற்றும் சுருதி ஆகியோர் கையில் துணிகள் கொண்ட தட்டுடன் உள்ளே நுழைகின்றனர்.

  அடுத்து எந்த போட்டியாளர்கள் வீட்டிற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2வது ப்ரோமோ வெளியாகியது. அதில், சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ரூ.12 லட்சம் பணத்தை எடுத்துச்சென்ற சிபியும், முன்னாள் போட்டியாளரான அபிநயும் வீட்டிற்குள் நுழைகின்றனர். வீட்டின் திரை மூடப்பட்டிருந்ததால் போட்டியாளர்களுக்கு யார் வருகிறார்கள் எனத் தெரியாது. வீட்டிற்குள் நுழையும் போதே அபிநய் "எங்கு ஆரம்பித்தோமோ அங்கேயே திரும்பி வந்து விட்டோமா?" என சந்தோஷத்தில் கேட்கிறார். அதற்கு சிபி " இறங்கின பஸ்லயே என்னை ஏத்திவிட்டாங்க" என்று நகைச்சுவையாக கூறுகிறார்.

  பிறகு இருவரும், பிக்பாஸ் வீட்டில் அமைக்கப்பட்டிருந்த ரேடியோ ஸ்டேஷனில் அமர்ந்து பேச ஆரம்பிக்கின்றனர். வீட்டின் திரை திறக்க ஆரம்பிக்கிறது. சிபியின் வாய்ஸை கேட்கும் போட்டியாளர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்தனர். அனைவரும் சென்று இருவரையும் கட்டியணைத்து வரவேற்கின்றனர்.

  அந்த வகையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் ஃபைனலிஸ்ட் போட்டியாளர்களுடன் முன்னாள் போட்டியாளர்களான நாடியா, சுருதி, அபிநய் மற்றும் சிபி ஆகியோர் உள்ளனர். BB ரேடியோ ஸ்டேஷனின் ஆர்ஜே-வாக இருக்கும் சிபி ராஜுவிடம் ஒரு கேள்வி கேட்கிறார். அதில், BB வீட்டை படமாக எடுக்க நினைத்தால், அதில் யாரை ஹீரோ, ஹீரோயின் மற்றும் வில்லனாக தேர்ந்தெடுப்பீர்கள் என கேட்கிறார். அதற்கு பதிலளித்த ராஜு, " இந்த படத்திற்கு ஹீரோவாக சிபியை போடுவேன். ஹீரோயின்ஸ் இந்த படத்தில் அதிகம் இருக்கிறார்கள். அதில் ஒன்னு இந்த ஆண்ட்டி என்று பிரியங்காவை பார்த்துசொல்கிறார். பின்னர், பாவனி, சுருதி, அக்ஷரா ஆகியோர் இருப்பார்கள். இது ஒரு பேய் படம். ஒவ்வொருத்தர் மேலையா பேய் வரும்" என சொல்கிறார். உடனே வீட்டில் உள்ள அனைவரும் சிரிக்கின்றனர். அதோடு ப்ரோமோவும் நிறைவடைகிறது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5