• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5: அண்ணாச்சி மற்றும் ராஜுவிற்கு அதிரடி தண்டனை கொடுத்த பிக் பாஸ்!

Bigg Boss Tamil 5: அண்ணாச்சி மற்றும் ராஜுவிற்கு அதிரடி தண்டனை கொடுத்த பிக் பாஸ்!

பிக் பாஸ் தமிழ்

பிக் பாஸ் தமிழ்

இரண்டாவது ப்ரோமோவில் அக்ஷ்ராவிற்கு "விஷ பாட்டில்" என்ற கிரீடம் வழங்கப்பட்டது இடம் பெற்றிருந்தது.

  • Share this:
    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஐந்தாவது சீசன் 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் தற்போது 13 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற "நீயும் பொம்மை நானும் பொம்மை தெரியும் உண்மை" என்ற டாஸ்க் நேற்று நிறைவு பெற்றது. இந்த டாஸ்கில் நிரூப் வெற்றி பெற்றுள்ளார். இதனிடையே பிக் சீசன் 5ன் அவார்ட்ஸ் நிகழ்ச்சி நேற்று ஆரம்பம் ஆனது. இதில் சிறந்த போட்டியாளர் விருது நிரூப்பிற்கும், சிறந்த உடை அணிபவர் விருது அக்ஷராவிற்கும், சிறந்த பொழுதுபோக்கு நபர் விருது ராஜுவிற்கும் வழங்கப்பட்டது.

    ஒவ்வொரு சீசனிலும் இந்த விருது வழங்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் இதில் பிரச்னை ஏற்படுத்தும் விருதுகளும் இருப்பது வழக்கம். அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சி இன்றும் தொடர்வதும் அதில் பிரச்சனை ஏற்படுத்திவதும் இன்று வெளியான முதல் இரண்டு ப்ரோமோக்களில் இருந்தது. முதல் ப்ரோமோவில், பாவ்னி - ராஜு இடையே மோதல் ஏற்பட்டது.

    இரண்டாவது ப்ரோமோவில் அக்ஷ்ராவிற்கு "விஷ பாட்டில்" என்ற கிரீடம் வழங்கப்படுகிறது, அதற்கு அக்ஷ்ரா, யாருக்கும் நான் விஷமாக இல்லை, பிடிக்கவில்லை என்றால் தூரமாக இருந்துவிடுவேன் என்கிறார். பின்னர் இசைவாணிக்கு, "தொட்டே சிணுங்கி" என்ற கிரீடமும், "சிம்ப்ளி வேஸ்ட்" கிரீடமும் கொடுக்கப்படுகிறது. இந்த டாஸ்கில் ஏற்படும் பிரச்சனைகள் இன்று ஒளிபரப்பாகும் என எதிர்பாக்கப்பட்ட நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், முகத்திற்கு நேராக கருத்துக்களை சொல்ல தைரியம் இல்லாமல் தனித்தன்மையை இழந்து நிற்கும் இரண்டு நபர்களை தேர்வு செய்து சொல்ல வேண்டும் என பிக் பாஸ் அறிவிக்கிறார்.

    இதற்கு பிரியங்கா, சிபி, பாவ்னி ஆகியோர் ராஜு என கூறுகின்றனர். இமான் மற்றும் ராஜு என இசைவாணி, தாமரை கூறுகின்றனர். இதனை தொடர்ந்து இமான் மற்றும் ராஜுவிற்கு தண்டனை வழங்கப்படுவதாக அறிவிக்கும் பிக் பாஸ், இருவரையும் கார்டன் ஏரியாவில் அமரவைத்து குளிர்ந்த தண்ணீரை அவர்கள் மீது ஊற்றுமாறு கூறுகிறார். இதனையடுத்து ராஜு மற்றும் இமான் நாற்காலியில் அமர்ந்திருக்க ஒவ்வொருவராக வந்து தண்ணீரை ஊற்றுகின்றனர். அப்போது தாமரை, ராஜு மீது தண்ணீர் ஊற்றும் போது "அப்படியே செருப்பை கழட்டி அடித்து விட்டு செல்" என ராஜு கோபமாக கூறும் காட்சிகள் உள்ளது.



    தாமரை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததில் இருந்து மிகவும் வெகுளித்தனமாக நடந்து கொண்டார். அப்போது பெரும்பாலான நேரங்களில் தாமரைக்கு ஆதரவாக ராஜு இருந்துள்ளார். மேலும் சமீபத்தில் நடைபெற்ற டாஸ்கில் கூட தாமரை வெளியேறிவிடக்கூடாது என்பதற்காக அவருக்காக நாணயத்தை எடுத்து கொடுத்தார். இதேபோல அடிக்கடி தனியாக தாமரைக்கு அறிவுரையும் கூறி வந்தார். இந்தநிலையில் தாமரை, ராஜுவின் பெயரை கூறுவார் என சற்றும் எதிர்பார்க்காத நிலையில் ராஜு கோபமாக பேசுவது தெரிகிறது. இதனால் இன்றைய நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: