Home /News /entertainment /

ராஜு எடுத்த அதிரடி முடிவு... பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் பிரியங்கா?

ராஜு எடுத்த அதிரடி முடிவு... பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் பிரியங்கா?

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் ஒருவரை தேர்ந்தெடுத்து பைனலுக்கு அனுப்ப முடியவில்லை என்றால், இந்த பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்ப ஒருவரை தேர்ந்தெடுங்கள் என அறிவிக்கிறார்.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. பிக் பாஸ் சீசன் 5ல், தற்போது ராஜு ஜெயமோகன், பிரியங்கா, பாவ்னி, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் மற்றும் அமீர் ஆகிய 7 போட்டியாளர்கள் இறுதி கட்ட போட்டியில் இருந்தனர்.

    அடுத்த வாரம் இந்நிகழ்ச்சியின் ஃபினாலே நடைபெற உள்ள நிலையில், இந்த வாரம் டிக்கெட் டு பின்னாலே வெற்றியாளர் அமீரை தவிர மீதம் உள்ள 6 பேரும் நாமினேஷனில் உள்ளனர். இவர்களில் இந்தவாரம் எலிமினேட் ஆகப்போவது யார் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளது. இதனிடையே இந்த வாரம் பணப்பெட்டியை எடுக்கப் போவது யார் என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

    ரூ. 3 லட்சத்துடன் தொடங்கிய இந்த டாஸ்க்கின் இறுதிக்கட்டத்தில் தொகையானது ரூ. 12 லட்சமாக அதிகரிக்கப்பட்டது. இந்த பணத்தை எடுத்து கொண்டு போவதாக சிபி முடிவு செய்தார். எனக்கு போகணும்னு மைண்ட் செட் ஆகிருச்சு. எனக்கு சுத்தமா கான்ஃபிடன்ஸ் போயிடுச்சு, எதனால் என்று தெரியவில்லை என்று கூறிவிட்டு சிபி சூட்கேசுடன் வெளியேறினார்.

    இந்தநிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், பிக் பாஸ் வீட்டில் ஃபோன் ஒலிக்கிறது. அதில், “இந்த வீட்டுக்கான இறுதி டேர், உலகத்தின் பார்வையில ஒரு முகத்தை மறைச்சிருக்காரு. ஆனா அத நாங்க கவனிச்சோம்னு தேர்ந்தெடுத்து சுத்தம் செஞ்சு நேரடியா இறுதி வாரத்துக்கு அனுப்பலாம்” என பிக் பாஸ் அறிவித்தார்.

    இரண்டாவது ப்ரோமோவில், இந்த டாஸ்க் குறித்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசி கொண்டிருக்கின்றனர். இன்று தேர்வாகும் நபர் நேரடியாக இறுதி போட்டிக்கு செல்லும் இரண்டாவது நபராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் பிக் பாஸ் ட்விஸ்ட் ஒன்றை அறிவிக்கிறார்.



    இதையும் படிங்க - மகிழ்ச்சியை இன்னும் அதிகரிக்க இளவரசி வந்தாள்... சந்தோஷத்தில் சீரியல் பிரபலம்!

    அதில், இவ்வளவு நேரம் ஆகியும் ஒருவரை தேர்வு செய்ய முடியவில்லையா? ஒருவரை தேர்ந்தெடுத்து பைனலுக்கு அனுப்ப முடியவில்லை என்றால், இந்த பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்ப ஒருவரை தேர்ந்தெடுங்கள் என அறிவிக்கிறார். இதற்காக ஒரு நாற்காலி, வாளியில் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது. இதில் ராஜு, தியாகம் தான் உன்னை உயர்த்தும் கோபால் என கூறி பிரியங்காவை நாற்காலியில் அமர வைக்கிறார். இதனை பார்த்து அதிர்ச்சியையும் பிரியங்கா நிஜமாக என்னை வீட்டிற்கு அனுப்புகிறாயா? என கேட்கும் காட்சிகள் உள்ளது. இதனால் இந்த டாஸ்கில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இன்று ஒருவர் வெளியேறுவாரா? இல்லை இது விளையாட்டிற்காகவா என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5

    அடுத்த செய்தி