• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ராஜூவை பங்கமாக கலாய்க்கும் ப்ரியங்கா - எச்சரித்த பிக் பாஸ்!

ராஜூவை பங்கமாக கலாய்க்கும் ப்ரியங்கா - எச்சரித்த பிக் பாஸ்!

பிரியங்கா

பிரியங்கா

சின்னப்பொண்ணு, தாமரை செல்வியுடன் அமர்ந்து ராஜு பேசி கொண்டிருக்கிறார். அதனை டைனிங் ஏரியாவில் இருந்து கவனிக்கும் பிரியங்கா, ராஜூவை பங்கமாக கலாய்த்து கொண்டிருக்கிறார்.

  • Share this:
    பிக் பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய நிலையில் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது, இரண்டு நாட்களை கடந்துள்ள நிலையில் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    நேற்றைய நிகழ்ச்சியில் முதல் லக்க்ஷுரி டாஸ்காக ‘’ஒரு கத சொல்லட்டுமா?” என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொருவரும் அவர்கள் வாழ்கையில் நடந்த கதை பற்றி சொல்ல வேண்டும். மேலும் ஒருவர் பேசி முடித்தவுடன் அவர்கள் கூறிய கதைக்கு டிஸ்லைக்ஸ், லைக்ஸ், ஹார்ட் கொடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அதன்படி போட்டியாளர்களுக்கு பாய்ண்ட்ஸ்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த டாஸ்கில் முதலில் இசைவாணியை பேசுமாறு பிக் பாஸ் அழைக்க அவரும் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து கண்கலங்கியவாறு பேசினார்.

    இதனை தொடர்ந்து சின்ன பொண்ணு கதை சொன்னார். காதல் திருமணம் செய்ததால் குழந்தையை வைத்து கொண்டு ரூ.20 சம்பளத்திற்கு ஊர் ஊராக சுற்றியதாகவும், உறவினர்கள் யாரும் உதவவில்லை என்றும் கூறினார். மேலும் ஒரு நேரம் மட்டுமே சாதம் சாப்பிடுவோம், மற்ற நேரம் கூல் தான் சாப்பிடுவோம் என தெரிவித்தார். இவருக்கு சக போட்டியாளர்கள் லைக்ஸ், ஹார்ட் கொடுக்க ராஜூ மட்டும் டிஸ்லை கொடுத்தார்.

    கலைஞர்கள் யாரும் தங்களது கஷ்டத்தை காட்டாமல் முன்னுக்கு வருவதில்லை, ஆனால் நாம் சிரிக்க மட்டும் தான் செய்ய வேண்டும். இது நம் கஷ்டத்தை சொல்லி தான் ஆக வேண்டும் என்ற மேடை தான், இருந்தாலும் உங்கள் வாழ்க்கையை கதையாக பண்ணவில்லை. அனைவரும் சூப்பர் என கைகொடுத்தால் நாம் வளர மாட்டோம். நடுவில் ஒரு சுவர் இருந்தால் தான் அதனை உடைக்க நினைப்போம், இதனை நீங்கள் உடைத்து மேலே வர வேண்டும், உங்கள் கதை நல்லா இருக்கு, ஆனா சொன்ன விதம் நல்லா இல்லை என்று டிஸ்லைக் கொடுத்ததாகவும் விளக்கினார். பின்னர் அதுகுறித்து சின்னபொண்ணுவிடம் தனியாகவும் பேசினார்.

    htt

    இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், சின்னப்பொண்ணு, தாமரை செல்வியுடன் அமர்ந்து ராஜு பேசி கொண்டிருக்கிறார். அதனை டைனிங் ஏரியாவில் இருந்து கவனிக்கும் பிரியங்கா, ராஜூவை பங்கமாக கலாய்த்து கொண்டிருக்கிறார். அவருடன் நிரூப், அபினவ், இசைவாணி, இமான் அண்ணாச்சி, நமீதா இருக்கின்றனர். அப்போது ராஜு பேசுவது போல பிரியங்கா பேசி காட்டுகிறார், டிஸ்லைக் கொடுத்ததால் நாமினேட் ஆக கூடாது என்பதால் சின்னப்பொண்ணு அக்காவிடம் நண்பராக முயற்சி செய்வதாக கூறி காட்டுகிறார். அப்போது குறுக்கிடும் பிக் பாஸ் பிரியங்கா மைக்கை சரியாக போடுங்கள் என எச்சரிக்கும் காட்சிகள் உள்ளது.



    இதுவரை இசைவாணி மற்றும் சின்ன பொண்ணு தங்களது கதையை கூறியுள்ள நிலையில் இன்று ஸ்ருதி, இமான் அண்ணாச்சி கூற இருப்பது இன்று வெளியாகியுள்ள ப்ரோமோக்கள் மூலம் உறுதியாகியுள்ளது. அதேபோல ரசிகர்கள் எதிர்பார்த்த சண்டை பரபரப்புகள் இன்று ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: