• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5: எலிமினேஷனில் இருந்து பிரியங்காவை காப்பாற்றிய பிக் பாஸ்!

Bigg Boss Tamil 5: எலிமினேஷனில் இருந்து பிரியங்காவை காப்பாற்றிய பிக் பாஸ்!

பிக் பாஸ் தமிழ் 5

பிக் பாஸ் தமிழ் 5

பிக் பாஸ் இன்றைய எலிமினேஷனில் யார் வெளியேற்றப்படுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

  • Share this:
    பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் இரண்டாவது சீசனில், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

    இதையடுத்து, நாடியா சங், அபிஷேக் ராஜா ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து இன்றைய எலிமினேஷனில் யார் வெளியேற்றப்படுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், ”நேரடியாக பாயிண்டுக்கே வந்துடுறேன். இதிலிருந்து ஒருவர் வெளியேற்றப்படுவார், அது யாருன்னு நீங்களே புரிஞ்சிக்க முடியும்ன்னு நினைக்கிறேன். வீட்டு ஞாபகம் வந்து அழுதவங்கள நாம பாத்துருக்கோம். ஆனா ஸ்நாக்ஸ் ஞாபகம் வந்து அழுத ஒருத்தர் இருக்கார்” என்று கமல் சொன்னதும் பிரியங்கா எழுந்து நிற்கிறார்.



    ”இருங்க கார்டுல என்ன வந்திருக்குன்னு பாப்போம்” என்றவாறு, “பிரியங்கா இஸ் சேஃப்” என்றதும் ஆனந்தத்தில் கண்கலங்குகிறார் பிரியங்கா.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: