Home /News /entertainment /

மைக்கை பார்த்ததும் குஷியான பிரியங்கா!

மைக்கை பார்த்ததும் குஷியான பிரியங்கா!

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

தற்போது வெளியான ப்ரோமோவில் இந்த பிக் பாஸ் வீட்ல பிரியங்காவ உங்களுக்கு பிடிச்சிருந்தா, எனக்கு தயவு செய்து வோட் பண்ணுங்கள் என்றார் பிரியங்கா

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். வைல்டு கார்டு என்ட்ரியாக அமீர் மற்றும் சஞ்சீவ் பங்கேற்றனர். சஞ்சீவ் வெளியேறிய நிலையில், அமீர் முதல் ஃபைனலிஸ்ட்டாக தேர்வானார்.

    பிக் பாஸ் சீசன் 5 முடிவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளது.இறுதி வாரத்தில், யார் வெற்றியாளராக பிக் பாஸ் டைட்டிலைப் பெறப் போகிறார் என்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.மக்களின் மனத்தைக் கவர்வதற்கு இறுதி வாய்ப்பாக, கோல்டன் மைக் என்ற டாஸ்க்கை பிக் பாஸ் அறிவித்துள்ளார். இந்த டாஸ்க்கில், தன்னை ஏன் வெற்றியாளராக தேர்வு செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு போட்டியாளரும் பேசி பார்வையாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்க வேண்டும். காலையில் வெளியான முதல் புரோமோவில், பாவனி மற்றும் நிரூப் பேசிய காட்சிகள் இருந்தன.

    அதில் பாவனி, தான் முழுக்க முழுக்க நேர்மையாக விளையாடி வருவதாகக் கூறியிருக்கிறார். நிரூப், அவ்வபோது மாற்றி மாற்றி பேசி, நிறைய பொய் சொன்னதாகக் கூறியிருந்தார்.

    இரண்டாவது புரோமோவில், ராஜு கோல்டன் மைக் டாஸ்க்கில் பேசும் காட்சிகள் இருந்தன. அதில், பிக் பாஸ் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டதாகவும், அதுவே தனக்கு வாழ்க்கையாக மாறப்போவதாகவும், உங்கள் வீட்டுப் பிள்ளை நான் என்றும் உருக்கமாக ராஜு பேசியுள்ளார்.

    தற்போது வெளியான மூன்றாவது புரோமோவில், பிரியங்கா பார்வையாளர்களிடம் பேசும் காட்சிகள் உள்ளன. மைக்கை பார்த்ததுமே பிரியங்காவின் முகத்தில் அளவில்லாத மகிழ்ச்சி தோன்றிய காட்சி இருக்கிறது.தன்னுடைய வாழ்க்கை தனது வேலை / கேரியர் மட்டுமே ஒவ்வொரு கட்டத்திலும் துணையாக இருந்து, தன்னை உயர்த்தியுள்ளது என்று பிரியங்கா லேசாக கண்கலங்கிக் கூறும் காட்சிகள் உள்ளன. பிரியங்கா பேசும் போது, சிங்கப்பெண்ணே பாடல் பின்னணியில் ஒலிக்கிறது. பிரியங்கா ஒரு முன்னணி ஆன்க்கராக வர எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார் என்பதைக் கூறும் போது, ஒலிக்கும் சிங்கப்பெண்ணே பாடல் தன்னுடைய வாழ்வில் கஷ்டப்பட்டு முன்னேறியதை மரியாதை செலுத்தும் வகையில் இருக்கிறது.

    நடிகை நிதி அகர்வாலுடன் லிவிங் டுகெதரில் சிம்பு? விரைவில் திருமணம்?



    ராஜா சாருக்கு இது தெரியாதா? இளையராஜாவை விமர்சிக்கும் சின்மயி

    மைக் புடிச்சிட்டு ஆங்கரிங் பண்றது தான் எல்லாமே. ஐ லவ் மை ஜாப். எனக்கு உடனே இந்த எடம் கிடைக்கல, இந்த எடத்துக்கு நான் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன். ஆனா, அதைத் தாண்டி, ஒரு கன்டஸ்ட்டன்டா நான் ஒரு ஷோல ஜெயிக்க ஆசைப்படறேன். இந்த பிக் பாஸ் வீட்ல பிரியங்காவ உங்களுக்கு பிடிச்சிருந்தா, எனக்கு தயவு செய்து வோட் பண்ணுங்கள்” என்று பிரியங்கா கூறும் காட்சிகள் உள்ளன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5

    அடுத்த செய்தி