• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5: ஐக்கியுடன் நட்பு பாராட்டும் நிரூப் - கடுப்பான பிரியங்கா!

Bigg Boss Tamil 5: ஐக்கியுடன் நட்பு பாராட்டும் நிரூப் - கடுப்பான பிரியங்கா!

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

பிரியங்கா மற்றும் நிரூப் இருவரும் நல்ல நண்பர்கள். இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக

  • Share this:
    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஐந்தாவது சீசன் 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. பிக் பாஸ் சீசன் 5 ஆரம்பத்தில் சற்று போரிங்காக சென்ற நிலையில் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது கொடுக்கப்பட்டுள்ள டாஸ்கில் பலரது முகமூடிகளை விலகி வருவதால் யார் கேமை சிறப்பாக விளையாடுகிறார்கள் என்பது தெரிய தொடங்கி இருக்கிறது. கடந்த சீசனை போல இந்த சீசனில் அன்பு, பாசம் என்ற பெயரில் எவ்வித இடையூறும் ஏற்படவில்லை. மேலும் கேங் எதுவும் இல்லாமல் பெரும்பாலான போட்டியாளர்கள் தங்கள் விளையாட்டை தங்களுக்காக மட்டும் விளையாடி வருகின்றனர்.

    எனினும் இந்த சீசனிலும் ஒரு சில மினி கேங்குகள் இருந்து வருகிறது. இவர்கள் டாஸ்க் என வந்துவிட்டால் தனியாக விளையாடினாலும், மற்ற நேரங்களில் ஒன்றாகவே இருக்கின்றனர். அதில் ராஜு, சிபி, அண்ணாச்சி ஆகியோர் ஒன்றாகவும், பிரியங்கா - நிரூப், பாவ்னி - மது - இசை - தாமரை, வருண் - அக்ஷ்ரா, ஐக்கி - அபினய் என பிரிந்து இருக்கின்றனர்.

    இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், ஐக்கி மற்றும் நிரூப் ஆகியோர் வெளியில் அமர்ந்து பேசி கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து பிரியங்கா தனியாக கேமரா முன்பு பேசி கொண்டிருக்கிறார். அப்போது, முதல் நாளில் இருந்து நிரூப் என்னுடன் நண்பனாக இருக்கிறார், அவனுக்கு தெரிகிறது, இது எனக்கு பிடிக்கவில்லை என்பது, ஐக்கியை எதுவும் சொல்ல முடியாது, அவள் அவருடைய வேலையை பாத்திருக்கிறாள். எனக்கு பொசஸிவ்வாக இருக்கிறது என்கிறார். இதனை தொடர்ந்து அங்கு நிரூப் வரவே, அவர் இதுகுறித்து விளக்கம் அளிக்கிறார். நான் கூறிய ஒரே வார்த்தைக்காக ஐக்கி எனக்காக ஓடி என்னை வெற்றி பெற வைத்திருக்கிறார், அவரும் இனி என் பிரண்ட் என்கிறார். அதற்கு பிரியங்கா, அப்போ நான்? என மிகவும் கவலையாக கேட்க அதற்கு நிரூப் திருதிருவென முழிக்கும் காட்சிகள் உள்ளது.

    பிரியங்கா மற்றும் நிரூப் இருவரும் நல்ல நண்பர்கள். இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக "நீயும் பொம்மை நானும் பொம்மை தெரியும் உண்மை" என்ற பெயரில் நடந்த டாஸ்கில், போட்டியாளர்கள் அவர்களுக்காக விளையாடாமல் மற்றவர்கள் வெற்றிக்காக விளையாட வேண்டும் என கூறப்பட்டது. ஒவ்வொரு போட்டியாளர் குறிக்கும் வகையில் ஒவ்வொரு பொம்மை கார்டனில் வைக்கப்பட்டு இருக்கும். மணி அடித்ததும் போட்டியாளர்கள் அவர்களுடைய பொம்மையை விட்டுவிட்டு மற்றவர்கள் யாராவது ஒருவருடைய பொம்மையை தூக்கிக்கொண்டு ஓடிச்சென்று அருகே அமைக்கப்பட்டுள்ள கூடாரத்திற்குள் செல்ல வேண்டும்.

    இதில் கடைசியாக வரும் போட்டியாளர் கையில் இருக்கும் பொம்மையில் குறிப்பிட்டிருக்கும் நபர் வெளியேற வேண்டும் என கூறப்பட்டது. இதில் ஒவ்வொருவரும் அவர்களது நண்பர்களுடன் இணைந்து விளையாடினர். இந்த டாஸ்கில் ஐக்கி மற்றும் நிரூப் கூட்டு சேர்ந்து விளையாடினர். இந்த போட்டியில் பிரியங்கா, சிபி , வருண், அக்ஷ்ரா, ராஜு, மதுமிதா, பாவ்னி, இமான், அபினய், இசை ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டான நிலையில், நிரூப், ஐக்கி, தாமரை ஆகியோர் தோல்வியடையாமல் இருந்தனர்.



    இதனிடையே நேற்று இந்த டாஸ்க் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட, நிலையில் இன்று மீண்டும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஐக்கி, நிரூப்பை வெற்றி பெற வைத்துவிடுகிறார் என்பதால் பிரியங்கா - நிரூப் இடையே இந்த வாக்குவாதம் நடக்கிறது என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த முழு விவரமும் இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: