• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5: அக்‌ஷரா ரெட்டியை கார்னர் செய்யும் பிக் பாஸ் போட்டியாளர்கள்

Bigg Boss Tamil 5: அக்‌ஷரா ரெட்டியை கார்னர் செய்யும் பிக் பாஸ் போட்டியாளர்கள்

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் குழப்பமானவர் பட்டத்தை அக்‌ஷராவுக்கு கொடுக்கிறார் பிரியங்கா.

  • Share this:
    பிக் பாஸ் நிகழ்ச்சியின் தற்போதைய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் இரண்டாவது சீசனில், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

    இதையடுத்து, நாடியா சங், அபிஷேக் ராஜா ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து இன்றைய எலிமினேஷனில் யார் வெளியேற்றப்படுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், கொடுக்கப்பட்டுள்ள 7 பட்டங்களை ஒவ்வொருவரும் 7 பேருக்கு கொடுக்க வேண்டும். அப்போது குழப்பமானவர் பட்டத்தை அக்‌ஷராவுக்கு கொடுக்கிறார் பிரியங்கா. அடுத்தவர் மனதை புண்படுத்துபவர் பட்டத்தை பிரியங்காவிற்கு கொடுக்கிறார் அக்‌ஷரா. இதைத் தொடர்ந்து பொய்யானவர் என்ற பட்டத்தை அக்‌ஷராவுக்கு கொடுக்கிறார் நிரூப்.



    இப்படி அனைவரும் அக்‌ஷராவை கார்னர் செய்ய, அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிந்துக் கொள்ள காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: