Home /News /entertainment /

நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் நிரூப் - பிரியங்கா.... குறும்படம் வெளியாகுமா?

நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் நிரூப் - பிரியங்கா.... குறும்படம் வெளியாகுமா?

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

நிரூப் - பிரியங்கா அடிக்கடி சண்டை போட்டு கொண்டாலும் அவர்களிடையே ஒரு நல்ல நட்பு இருந்து வருகிறது. ஆனால் இன்று இருவரும் கடுமையாக மோதி கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

  பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கி தற்போது வெற்றிகரமாக 60 நாட்களை நெருங்கியுள்ளது. 18 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் தற்போது சிபி, ராஜு, இமான் அண்ணாச்சி, வருண், நிரூப், அமீர், சஞ்சீவ், அபினய், அபிஷேக், பாவ்னி, பிரியங்கா, அக்ஷரா, தாமரை என 13 போட்டியாளர்கள் வீட்டில் உள்ளனர்.

  இந்தநிலையில் இந்தவார லக்ஸரி டாஸ்காக "பிக் பாஸ் பிரேக்கிங் நியூஸ்" என்ற டாஸ்க் வழங்கப்பட்டது. இதில் ப்ளூ டிவி, ரெட் டிவி என போட்டியாளர்கள் இரு குழுவாக பிரிந்தனர். ப்ளூ டிவி அணியில் ராஜு, அக்ஷ்ரா, தாமரை, பாவ்னி, இமான் ஆகியோரும், ரெட் டிவி அணியில் பிரியங்கா, வருண், அபிஷேக், நிரூப், சிபி ஆகியோர் இருந்தனர். இந்த போட்டியில் நடுவராக சஞ்சீவ் இருக்கிறார்.

  கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த இந்த டாஸ்கில் நேற்று, தாமரையின் உண்மை முகத்தை கொண்டு வருவதற்காக ரெட் சானல் ஒரு பிராங்க் ஷோ செய்ததுதான் நேற்றைய எபிசோடின் ஹைலைட். முதலில் ரெட் டிவி அணியினர் செய்தி வாசித்தனர். அதில் தாமரை குறித்து பிரியங்கா எதோ கேள்வி கேட்க சிபி அதனால் டென்ஷன் ஆனார். அப்போது அபிஷேக் இடைவேளை விடுவதாக அறிவிக்க, எல்லா நேரமும் அப்படி விட முடியாது என கூறி கோபமான வெளியேறினார். மேலும் பேப்பரை அவர் கிழித்து தூக்கி எறிந்துவிட்டு போனார். இதனால் கடுப்பான பிரியங்கா நீ கேள்வி கேட்க வேண்டாம், நான் கேட்கிறேன் சிபி என்று கூறினார். மேலும் செல்ல புள்ள தங்க புள்ள என உன்னை தாமரை கொஞ்சுவதால் தாமரையிடம் கேள்வி கேட்காமல் இருக்க முடியாது என்றார்.

  இதனை கேட்டு ஆத்திரமடைந்த தாமரை, நான் பாசமாக செல்ல புள்ள தங்க புள்ள என்று கூறுவதை ஏன் நீ கலாய்கிறாய்? நீ முதலில் நியாயமாக நட என பிரியங்காவிடம் கோபமாக கூறினார். அதற்கு பிரியங்கா உன் உண்மையான முகம் வெளிவந்துவிட்டது என்றார். இதனை தொடர்ந்து தாமரை ஒரு புறம் கத்தி கொண்டு இருக்க, பிரியங்கா, வருண், சிபி, அபிஷேக் என எல்லோரும் சண்டை போட்டுக்கொண்டிருந்தனர். இதனை பார்த்த டாஸ்கின் நடுவர் சஞ்சீவ் அமைதியாக இருக்குமாறு கத்தினார்.

  பின்னர் டாஸ்க் மீண்டும் தொடங்கியது, அப்போது “இவங்க மட்டும் தங்கப்பிள்ள, செல்லப்பிள்ளன்னு கொஞ்சுவாங்களாம். ஆனா எங்க நட்பை மட்டும் சந்தேகப்படுவாங்களாம்” என்று பிரியங்கா கூறினார். இதனால் தாமரை மீண்டும் சண்டை போட ஆரம்பித்தார். இறுதியாக இது வெறும் பிராங்க், டாஸ்க்கிற்காக டிஆர்பி-யை அதிகரிக்க ரெட் சேனல் டீம் இப்படி செய்ததாகவும், இதனால் தாமரையை கஷ்டப்படுத்தியிருந்தால் மன்னிக்கும்படியும் கேட்டு கொண்டனர்.

  நேற்றைய ப்ரமோவைப் பார்த்துவிட்டு ‘அது உண்மையான சண்டை’ என்று பலர் நினைத்திருந்த நிலையில் பிக் பாஸ் ரசிகர்கள் மட்டுமின்றி, நடுவர் சஞ்சீவும், ப்ளூ டீம் அணியினரும் ஷாக் ஆக்கினர். இறுதியாக இந்த டாஸ்க் நேற்று நிறைவடைந்தது. பின்னர் இரண்டு அணிகளின் செயல்பாடுகளையும் மதிப்பிட்ட சஞ்சீவ், ரெட் சேனல் அதிக மதிப்பெண்களை பெற்று வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

  இந்நிலையில் இன்று பிரியங்கா - நிரூப் இடையே மோதல் ஏற்படுவது தெரிகிறது. ‘சும்மா இஷ்டத்துக்கு உக்காந்து கலாய்ச்சிட்டு இருந்தீங்களே, நா வேணாம்ன்னு சொல்லியும், கலாய்ச்சீங்களே எதுக்கு’ என பிரியங்காவிடம் கத்துகிறார் நிரூப். அப்போது ‘உன்ன நான் கலாய்ச்சதுல எதும் பிரச்னைன்னா என் கிட்ட வந்து பேசு, அவ கிட்ட ஏன் கத்திட்டு இருக்க’ என்கிறார் அபிஷேக். இதையடுத்து நிரூப்பிற்கும், பிரியங்காவிற்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்போது ‘ப்ளீஸ் பிக் பாஸ் இதை நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தால், சிபியோட பெட்டில் உட்கார்ந்து நாங்க ஒவ்வொருத்தரும் இதை இதை பண்ணலாம்ன்னு நாங்க டிஸ்கஸ் செய்ததை தயவு செஞ்சு ப்ளே பண்ணுங்க என்றார் பிரியங்கா.  தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், நீ தான் அவனுக்கு பில்ட்-அப் கொடுத்து, பாதுகாத்து அவனை அடைகாத்து தூக்கி ஒரு கூட்டில் வைத்திருக்கிறாய், தப்பு செஞ்சா சொல்லி கொடுக்கலாம், சீப்பாக நடந்து கொண்டா சொல்லி கொடுக்க முடியாது என்கிறார் அபிஷேக். இதனை தொடர்ந்து பிரியங்காவிடம் பேசும் நிரூப், நீங்களே எல்லாவற்றையும் முடிவு செய்து கிழித்து விடுவீர்கள் என்கிறார். இதற்கு பதிலளிக்கும் பிரியங்கா, உன் வாயில் என்ன பால் டப்பா வைத்திருந்தியா? நான் சனிக்கிழமை குறும்படத்திற்காக காத்திருக்கிறேன், வெளியே போ என்று சொன்னால் போய்விடுவேன் டா என்று கூறும் காட்சிகள் உள்ளது. நிரூப் - பிரியங்கா அடிக்கடி சண்டை போட்டு கொண்டாலும் அவர்களிடையே ஒரு நல்ல நட்பு இருந்து வருகிறது. ஆனால் இன்று இருவரும் கடுமையாக மோதி கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published:

  Tags: Bigg Boss Tamil 5

  அடுத்த செய்தி