Home /News /entertainment /

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் கற்றுக்கொண்டது இதுதான்... மனம் திறக்கும் பிரியங்கா!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் கற்றுக்கொண்டது இதுதான்... மனம் திறக்கும் பிரியங்கா!

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

இரண்டாவது ப்ரோமோவில், அனைவரும் ஒன்றாக அமர்த்திருக்கின்றனர். அப்போது முன் வந்து பேசும் பிரியங்கா, இந்த வீட்டில் தான் கற்றுக்கொண்டது என்ன என்பது குறித்து விளக்குகிறார்

    இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் டிக்கெட் டு பினாலே டாஸ்க் பரபரப்பாக நடந்து வருகிறது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 5, தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இறுதி கட்ட போட்டியில், ராஜு ஜெயமோகன், பிரியங்கா, பாவ்னி, தாமரை செல்வி, சிபி, நிரூப், சஞ்சீவ் மற்றும் அமீர் ஆகிய 8 போட்டியாளர்கள் உள்ளனர்.

    நேரடியாக ஃபைனலுக்கு தேர்வாகும் டிக்கெட் டு ஃபினாலேவின் முதல் போட்டியில் யார் இந்த டிக்கெட்டை பெற தகுதியானவர்கள் இல்லை என்பதை முடிவு செய்ய வேண்டும் என போட்டியாளர்களிடம் கேட்கப்பட்டது. அதில் அனைவரும் முடிவு செய்து நிரூபை வெளியேற்றினர்.

    அதற்கு அடுத்ததாக முட்டை உடைக்கும் போட்டியில், தாமரை மற்றும் பாவனி இருவரும் வெளியேறினர். மூன்றாவது போட்டியில் பிரியங்கா மற்றும் ராஜு வெளியேறினார்கள். நேற்றைய நிகழ்ச்சியில், டிக்கெட் டு ஃபினாலேவின் நான்காவது டாஸ்க் வைக்கப்பட்டது. இதில் ஃபினாலே ரேஸில் இருக்கும் சிபி, அமீர் மற்றும் சஞ்சீவ் ஆகிய மூவரும் பங்கேற்றனர்.

    இந்த டாஸ்கில் போட்டியில் இருந்து வெளியேறிய ஒவ்வொரு போட்டியாளருக்கும் கேள்விகள் கேட்கப்படும். அந்த கேள்விக்கு வீட்டில் இருக்கும் போட்டியாளர்களும், கேள்வி கேட்கப்பட்ட TTF ரேசில் இருக்கும் போட்டியாளர்களும் ஒரே மாதிரியான பதில் அளித்தால், அவர்கள் ஒரு படி முன்னேறலாம். விரைவாக சரியான பதில்களை சொல்லி, எல்லைக் கோட்டைத் தொடும் இரண்டு போட்டியாளர்கள் அடுத்த இறுதி கட்ட போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என கூறப்பட்டது. அதன்படி வீட்டில் நடந்த நிகழ்வுகள் அடிப்படையில் ஒவ்வொருவராக கேள்வி எழுப்பினர். இந்த டாஸ்கில் இறுதியாக அமீர் மற்றும் சிபி வெற்றி பெற்று இறுதிக்கட்டத்திற்கு முன்னேறியுள்ளனர்.

    இந்தநிலையில் இன்று டிக்கெட் டு பினாலேவின் இறுதி டாஸ்க் நடைபெறுவதும் அதில் அமீர் மற்றும் சிபி தீவிரமாக பங்கேற்கும் கட்சிகளும் இன்றைய முதல் ப்ரோமோவில் இருந்தது. தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், அனைவரும் ஒன்றாக அமர்த்திருக்கின்றனர். அப்போது முன் வந்து பேசும் பிரியங்கா, இந்த வீட்டில் தான் கற்றுக்கொண்டது என்ன என்பது குறித்து விளக்குகிறார்.



    அதில், நான் எமோஷனலான நபர் என்பது எனக்கு தெரியும், "ஒரு விஷயம் உன்னுடையதாக இருந்தால் அது கண்டிப்பாக உன்னிடம் தான் இருக்கும், அது உன்னுடையது இல்லை என்றால் அப்படியே ப்ரீயாக விட்டுவிட வேண்டும். அது திரும்ப உன்னிடம் வந்தால் அது உன்னுடையது, வரவில்லை என்றால் உன்னுடையது அல்ல" என்பதை நான் தெரிந்து கொண்டேன் என பேசுகிறார்.

    இதன்மூலம் நிரூப் மற்றும் தாமரை குறித்து பிரியங்கா பேசுவது தெளிவாக தெரிகிறது. ஆரம்பத்தில் தாமரை மற்றும் நிரூப் இருவரும் பிரியங்காவுடன் நெருக்கமாக இருந்த நிலையில் தற்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவு கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் டிக்கெட் டு பினாலே டாஸ்க் நிறைவடைந்த பின்னர் இந்த டாஸ்க் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil 5

    அடுத்த செய்தி