Home /News /entertainment /

Bigg Boss Tamil 5 - நிரூப்புடன் ஜெயிலுக்கு செல்லும் பாவ்னி - என்ன காரணம்?

Bigg Boss Tamil 5 - நிரூப்புடன் ஜெயிலுக்கு செல்லும் பாவ்னி - என்ன காரணம்?

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

முன்னதாக இன்று வெளியான முதல் இரண்டு ப்ரோமோக்களிலும் கூட பிரியங்கா - நிரூப் இடையே மோதல் ஏற்படுவது தெரிகிறது.

    பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கி தற்போது வெற்றிகரமாக 60 நாட்களை நெருங்கியுள்ளது. 18 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் தற்போது சிபி, ராஜு, இமான் அண்ணாச்சி, வருண், நிரூப், அமீர், சஞ்சீவ், அபினய், அபிஷேக், பாவ்னி, பிரியங்கா, அக்ஷரா, தாமரை என 13 போட்டியாளர்கள் வீட்டில் உள்ளனர். இவர்களில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில், ராஜு, பிரியங்கா, தாமரை, சிபி, இமான், பாவ்னி, அக்ஷ்ரா, வருண், அபினய் மற்றும் அபிஷேக் ஆகிய 10 பேர் உள்ளனர்.

    இந்தநிலையில் இந்தவார லக்ஸரி டாஸ்காக "பிக் பாஸ் பிரேக்கிங் நியூஸ்" என்ற டாஸ்க் வழங்கப்பட்டது. இதில் ப்ளூ டிவி, ரெட் டிவி என போட்டியாளர்கள் இரு குழுவாக பிரிந்தனர். ப்ளூ டிவி அணியில் ராஜு, அக்ஷ்ரா, தாமரை, பாவ்னி, இமான் ஆகியோரும், ரெட் டிவி அணியில் பிரியங்கா, வருண், அபிஷேக், நிரூப், சிபி ஆகியோர் இருந்தனர். இந்த போட்டியில் நடுவராக சஞ்சீவ் இருந்தார்

    கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த இந்த டாஸ்க் நேற்று நிறைவடைந்தது. இதில் ரெட் சேனல் அதிக மதிப்பெண்களை பெற்று வெற்றி பெற்றதாக நடுவர் சஞ்சீவ் அறிவித்தார். ஒவ்வொரு டாஸ்க் நிறைவடைந்த பின்னரும், டாஸ்கில் சிறப்பாக செயல்பட்டவர்கள் மற்றும் சரியாக செயல்படாதவர்கள் என தேர்வு செய்வது வழக்கம். இதில் சரியாக செய்தவர்கள் நேரடியாக அடுத்த வார தலைவர் டாஸ்கில் போட்டியிடுவார்கள். அதேபோல சரியாக செயல்படாத இருவர் ஜெயிலுக்கு செல்வார்கள்.

    அதன்படி "பிக் பாஸ் பிரேக்கிங் நியூஸ்" டாஸ்கில் சிறப்பாக செயல்பாடாதவர்கள் யார் என்பதை இன்று தேர்வு செய்வது தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் தெரிகிறது. அதில், முதலில் பேசும் அபிஷேக், நிரூப் மற்றும் அமீரை கூறுகிறார். இதனை தொடர்ந்து வருண், அண்ணாச்சி, பிரியங்கா, அபினய் ஆகியோர் நிரூப் என கூற, அக்ஷ்ரா - பாவ்னியை சொல்கிறார். இறுதியாக நிரூப், பாவ்னி ஜெயிலுக்கு செல்லும் காட்சிகள் உள்ளது. மேலும் நிரூப் - பிரியங்கா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    முன்னதாக இன்று வெளியான முதல் இரண்டு ப்ரோமோக்களிலும் கூட பிரியங்கா - நிரூப் இடையே மோதல் காட்சிகள் இருந்தது. ‘சும்மா இஷ்டத்துக்கு உக்காந்து கலாய்ச்சிட்டு இருந்தீங்களே, நா வேணாம்ன்னு சொல்லியும், கலாய்ச்சீங்களே எதுக்கு’ என பிரியங்காவிடம் கத்துகிறார் நிரூப். அப்போது ‘உன்ன நான் கலாய்ச்சதுல எதும் பிரச்னைன்னா என் கிட்ட வந்து பேசு, அவ கிட்ட ஏன் கத்திட்டு இருக்க’ என்கிறார் அபிஷேக். இதையடுத்து நிரூப்பிற்கும், பிரியங்காவிற்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்போது ‘ப்ளீஸ் பிக் பாஸ் இதை நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தால், சிபியோட பெட்டில் உட்கார்ந்து நாங்க ஒவ்வொருத்தரும் இதை இதை பண்ணலாம்ன்னு நாங்க டிஸ்கஸ் செய்ததை தயவு செஞ்சு ப்ளே பண்ணுங்க என்றார் பிரியங்கா.



    மேலும் இரண்டாவது ப்ரோமோவில், பிரியங்காவிடம் பேசும் நிரூப், நீங்களே எல்லாவற்றையும் முடிவு செய்து கிழித்து விடுவீர்கள் என்கிறார். இதற்கு பதிலளிக்கும் பிரியங்கா உன் வாயில் என பால் டப்பா வைத்திருந்தியா? நான் சனிக்கிழமை குறும்படத்திற்காக காத்திருக்கிறேன், வெளியே போ என்று சொன்னால் போய்விடுவேன் டா என்று கூறும் காட்சிகள் உள்ளது. இதனால் இன்று நிரூப் - பிரியங்கா இருவரும் கடுமையாக மோதி கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil 5

    அடுத்த செய்தி