• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • வருண் குறித்து தவறாக பேசிய அபினய்? அனைவர் முன்பும் போட்டுடைத்த பாவனி

வருண் குறித்து தவறாக பேசிய அபினய்? அனைவர் முன்பும் போட்டுடைத்த பாவனி

பிக் பாஸ்

பிக் பாஸ்

இதனை தொடர்ந்து சிபி, அபினய் வாடிபாவ்னி ஆகியோர் வெளியே நின்று பேசிக்கொண்டிருக்கின்றனர்

  • Share this:
    விஜய் டிவி-யில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் தற்போது இரண்டு வாரங்களை கடந்துள்ளது. இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளார், மேலும் முதல் எலிமினேஷனாக நாடியா வெளியேற்றப்பட்டுள்ளார்.

    தற்போது 16 போட்டியாளர்கள் உள்ளனர். இதில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் அபிஷேக், அக்ஷரா, அபினய், இசைவாணி, சின்னப்பொண்ணு, தாமரை செல்வி, ஐக்கி பெர்ரி, பிரியங்கா, பாவ்னி ஆகிய 9 பேர் உள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பிரியங்கா, ராஜு, பாவ்னி, அக்ஷரா, இமான் ஆகியோருக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு அதிகமாக உள்ளது. இதில் குறிப்பாக பாவ்னிக்கு ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கதை சொல்லட்டுமா டாஸ்கில், இவர் தனது வாழ்க்கை குறித்து பேசியது அனைவர் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

    பாவ்னியின் கணவர் தற்கொலை செய்து கொண்டது பற்றியும், அதனால் அவருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் அதில் பேசி இருந்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி, சக போட்டியாளர்கள் மத்தியிலும் அவருக்கு அனுதாபம் ஏற்பட்டது. இதனால் முதல் வார நாமினேஷனில் பாவ்னி பெயரை யாருமே கூறவே இல்லை. பாவ்னியை பொறுத்தவரை எதுவாக இருந்தாலும் நேருக்கு நேராக பேசக்கூடியவர்.

    இந்த நிலையில் இன்று வெளியான மூன்றாவது ப்ரோமோவில்,அபினய் வாடி, வருண் குறித்து தன்னிடம் தவறாக கூறியதாக நேரடியாக வருணிடமே கூறுகிறார். நான் முன்னாடியே நின்று பேசுவேன் எனக்கு பின்னாடி பேச வராது, நான் இப்போது வருண் முன்னாடியே கூறுகிறேன், உங்களை பற்றி அபினய் என்னிடம் தவறாக கூறினார் என்கிறார்.

    இதனை தொடர்ந்து சிபி, அபினய் வாடிபாவ்னி ஆகியோர் வெளியே நின்று பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது பாவ்னி இது வெறும் கேம் ஷோ தான், நீங்கள் நேரடியாக வருணிடமே கூறுங்கள் என்கிறார். அதற்கு அபினய் வாடி, நான் உனக்கு விளக்கம் தருகிறேன் என கூற அதற்கு பாவ்னி இல்லை, வேண்டாம் என கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார். அபினய் வாடி மற்றும் பாவ்னி தற்போது நண்பர்களாக உள்ளார். நேற்றைய பஞ்சதந்திரம் டாஸ்கின் போது கூட இருவரும் தான் நாணயங்களை எடுத்து பாதுகாத்தது வந்தனர். இதற்கிடையே என்ன பிரச்னை என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரிவரும்.

    முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அபினய் வாடி அதிகம் அக்கறை காட்டுகிறார். அது எந்த விதமானது என தெரியல, அவர் செய்வது எனக்கு மனது டிஸ்டர்ப் ஆகிறது என பாவனி, மதுவிடம் கூறினார். பின்னர் அபிநய் வட்டியை நேராக அழைத்தும் பேசினார். அப்போது, நீங்கள் என் மீது காட்டும் அக்கறை எனக்கு தவறாக தெரிகிறது, உங்களை நான் அண்ணா என்று தான் ஆரம்பத்தில் இருந்து கூப்பிடுகிறேன்.



    நான் அப்படி கூப்பிடுவது உங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை தானே?" என கேட்டார். அதற்கு என் பெயர் அபினவ் இல்லை அபினய் என கூப்பிடு என்று தான் சொன்னேன் வேறு எதுவும் இல்லை என அபினய் விளக்கினார். அப்படி என்றால் நான் தான் உங்களை பற்றி தவறாக நினைத்து கொண்டிருக்கிறேன், மன்னித்து விடுங்க என சொல்லி பாவ்னி மன்னிப்பு கேட்டார். இதன் பின்னர் இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கும் நிலையில் இவர்களிடையே என்ன பிரச்னை என்பது இன்று தெரியவரும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: