ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நீ நேர்மையா ஆடல... சூடு பிடிக்கும் பிக் பாஸ் நாமினேஷன்

நீ நேர்மையா ஆடல... சூடு பிடிக்கும் பிக் பாஸ் நாமினேஷன்

பிக் பாஸ் சிபி

பிக் பாஸ் சிபி

இன்றைய ப்ரோமோவில் நிரூப்பை நாமினேட் செய்யும் சிபி, ’நீ இந்த கேமை பொருத்தவரைக்கும் நேர்மையா ஆடல’ என்கிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

    பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் வாடி, சின்ன பொண்ணு, பாவ்னி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் தனிப்பட்ட காரணங்களுக்காக நமீதா மாரிமுத்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் வாரத்தில் குறைந்த வாக்குகள் பெற்றதால் நாடியா வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து பிரபல யூடியூபரான அபிஷேக் ராஜா இரண்டாவது நபராக வெளியேற்றப்பட்டார். பின்னர் சின்ன பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி, இமான் அண்ணாச்சி, அபிநய் ஆகியோர் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    அதோடு முதல் வைல்டு கார்டு எண்ட்ரியாக அபிஷேக் ராஜா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டும் வருகை தந்தார். இவரை தொடர்ந்து சஞ்சீவ் மற்றும் அமீர் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்தனர். ஆனால் அபிஷேக் ராஜா வந்த இரண்டாவது வாரத்திலேயே மீண்டும் வெளியேற்றப்பட்டார். மேலும் கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் டபுள் எலிமினேஷன் நடைபெற்றது. அதில் வருண் மற்றும் அக்ஷ்ரா ஒரே நாளில் வெளியேறினர். இதையடுத்து நேற்று சஞ்சீவ் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

    இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைப்பெறுகிறது. அதில் யாரை நாமினேட் செய்ய வேண்டுமோ, அவர்கள் கழுத்தில் மாலை அணிவித்து, காரணத்தைத் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதன்படி, நிரூப்பை நாமினேட் செய்யும் சிபி, ’நீ இந்த கேமை பொருத்தவரைக்கும் நேர்மையா ஆடல’ என்கிறார். ராஜு கழுத்தில் மாலை போடும் பாவனி, ‘ஹேப்பி நாமினேஷன்’ என்கிறார். அதற்கு, ’நீ நேத்து நைட் ஒண்ணு பேசுவ, இன்னிக்கு காலைல ஒண்ணு பேசுவ’ என்கிறார் ராஜு.

    தாமரையை நாமினேட் செய்யும் பிரியங்கா, ’அப்போ நா மட்டும் உனக்கு ரொம்ப ஈஸியா போய்ட்டேனா’ என்கிறார். அதற்கு ’தப்பு செஞ்சவனை விட, தப்பு செய்ய தூண்டுனவன் கெட்டவன்’ என்கிறார் தாமரை.

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil 5