Home /News /entertainment /

அனைவரையும் நாமினேட் செய்த பிக் பாஸ் - அதிர்ச்சியில் போட்டியாளர்கள்

அனைவரையும் நாமினேட் செய்த பிக் பாஸ் - அதிர்ச்சியில் போட்டியாளர்கள்

பிக்பாஸ்

பிக்பாஸ்

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஓபன் நாமினேஷன் என பிக் பாஸ் அறிவிக்க, சிபியை நாமினேட் செய்கிறார் சஞ்சீவ்.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஐந்தாவது சீசனில், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

    இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா, பாடகி சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி நேற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். தவிர, அமீர் மற்றும் சஞ்சீவ் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ளனர்.



    இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஓபன் நாமினேஷன் என பிக் பாஸ் அறிவிக்க, சிபியை நாமினேட் செய்கிறார் சஞ்சீவ். இறுதியில் அனைவரையும் தான் நாமினேட் செய்வதாக அறிவித்த பிக் பாஸ், இந்த வாரத்தில் சில சவால்கள் கொடுக்கப்படும் என்றும், அதில் வெற்றி பெறுபவர்கள் நாமினேஷனில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் கூறுகிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil 5

    அடுத்த செய்தி