முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Bigg Boss Tamil 5: ஒரு நாள் பிக் பாஸாக மாறும் போட்டியாளர்கள்!

Bigg Boss Tamil 5: ஒரு நாள் பிக் பாஸாக மாறும் போட்டியாளர்கள்!

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

‘ஒருநாள் பிக் பாஸ். உங்களில் ஒரு நபரை பிக் பாஸ் ஆட்கொண்டால், அந்த நபர் பிக் பாஸாக மாறுவார்’ என்று அறிவிக்கிறார் பிக் பாஸ்.

  • Last Updated :

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் தனிப்பட்ட காரணங்களுக்காக நமீதா மாரிமுத்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் வாரத்தில் குறைந்த வாக்குகள் பெற்றதால் நாடியா வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து பிரபல யூடியூபரான அபிஷேக் ராஜா இரண்டாவது நபராக வெளியேற்றப்பட்டார். பின்னர் சின்ன பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி, இமான் அண்ணாச்சி, அபிநய், அக்‌ஷரா, வருண், வைல்ட் கார்டு எண்ட்ரியில் உள்ளே வந்த சஞ்சீவ், தாமரைச்செல்வி ஆகியோர் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ராஜா சாருக்கு இது தெரியாதா? இளையராஜாவை விமர்சிக்கும் சின்மயி

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், ‘ஒருநாள் பிக் பாஸ். உங்களில் ஒரு நபரை பிக் பாஸ் ஆட்கொண்டால், அந்த நபர் பிக் பாஸாக மாறுவார். அப்படி பிக் பாஸாக மாறும் நபரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்’ என்று அறிவிக்கிறார் பிக் பாஸ். இதையடுத்து பிரியங்கா, நிரூப், ராஜு ஆகியோர் பிக் பாஸாக மாறி வீட்டை ஆள்கிறார்கள்.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5