• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5: இந்த வார நாமினேஷன் லிஸ்டில் யார் யார்? உறுதியான இரண்டு நபர்கள்!

Bigg Boss Tamil 5: இந்த வார நாமினேஷன் லிஸ்டில் யார் யார்? உறுதியான இரண்டு நபர்கள்!

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

பாவனி மற்றும் பிரியங்காவை நாமினேட் செய்யும் தாமரை அழும் காட்சிகளும் இந்த ப்ரோமோவில் உள்ளது.

  • Share this:
    விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் தொடங்கி வெற்றிகரமாக 50 நாட்களை எட்டியுள்ளது. இந்த சீசனில் இதுவரை 6 பேர் வெளியேறியுள்ள நிலையில், தற்போது ராஜு ஜெயமோகன், அபிஷேக் ராஜா, பிரியங்கா, அபினய் வாடி, பாவனி, வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 12 போட்டியாளர்கள் உள்ளனர்.

    இன்று திங்கட்கிழமை என்பதால் நாமினேஷன் மற்றும் வீட்டின் தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரத்திற்கான தலைவர் டாஸ்க் நடைபெறுவது இன்றைய முதல் ப்ரோமோவில் இருந்தது. அதில் அபினய், இமான், ராஜு, தாமரை, அக்ஷ்ரா, வருண் ஆகியோர் பங்கேற்கின்றனர். இதில் கொடுக்கப்பட்ட பெட்டியை கொண்டு பஞ்சுகளை சேகரிக்க வேண்டும் என்றும் யார் தலைவராக தகுதி இல்லை என்பதை மற்ற போட்டியாளர்கள் முடிவெடுத்து ஒருமனதாக சொல்ல வேண்டும் என பிக் பாஸ் அறிவிக்கிறார்.

    இதில் அனைவரும் போட்டிப்போட்டு கொண்டு பஞ்சுகளை சேகரிக்கின்றனர். அப்போது பிரியங்கா தாமரையை பார்த்து 'நீ தலைவர் ஆனால் என்ன செய்வாய்' என கேட்கிறார். அதற்கு தாமரை 'நீங்க சொல்லிட்டு தான் செஞ்சீங்களா?' என கேள்வி கேட்கிறார். தாமரை இப்படி கேள்வி கேட்பார் என பிரியங்கா மட்டுமின்றி மற்றவர்களும் எதிர்பார்க்கவில்லை.

    இதனை தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில், எனக்கு தகுதி இல்லை என எதற்காக கூறினீர்கள் என பிரியங்காவிடம், தாமரை கேட்கிறார். அதற்கு பிரியங்கா, வாய்ப்புகள் வந்தா தான் இந்த வீட்டில் உள்ள கசப்புகளை சரி செய்ய வேண்டுமா? அதனை சீக்கிரமாகவே சரி செய்துவிடு என்கிறார். இதனால் கடுப்பாகும் தாமரை, சம்பந்தம் இல்லாமல் பேசக்கூடாது, என்ன கசப்பு என நேரடியாக கூறுங்கள் என்கிறார்.

    அதற்கு பிரியங்கா, தற்போது நீ இருக்கும் மன நிலைமையில் கேப்டன் ஆக உனக்கு தகுதி இல்லை என கூற, அதனை கூறும் தகுதி உங்களுக்கு இல்லை என தாமரை பதிலுக்கு கூறும் காட்சிகள் உள்ளது. அப்போது அங்கிருக்கும் பாவ்னி எழுந்து செல்லும் காட்சிகள் உள்ளது.

    இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், நாமினேஷன் நடைபெறும் காட்சிகள் உள்ளது. அதில் பாவ்னி, நிரூப், பிரியங்கா, அபினய் ஆகியோர் தாமரையை நாமினேட் செய்கின்றனர். தாமரை உண்மையாக இருக்கிறாரா? அல்லது பொய்யாக நடந்து கொள்கிறாரா? என சந்தேகம் இருப்பதாக அபினய் கூறுகிறார்.



    மேலும் பிரியங்காவை, அக்‌ஷரா மற்றும் ராஜு நாமினேட் செய்கின்றனர். இதனை தொடர்ந்து தாமரை என்னை பார்த்து ஏ... பே என கத்தினாள் என பிரியங்கா கூறுகிறார். பின்னர் பாவ்னி மற்றும் பிரியங்காவை நாமினேட் செய்யும் தாமரை அழும் காட்சிகளும் உள்ளது. தாமரை மற்றும் பிரியங்கா இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இருப்பது உறுதியாகியுள்ள நிலையில், நாமினேஷன் குறித்த முழு விவரம் மற்றும் இந்த வாரத்திற்கான தலைவர் யார் என்ற விவரங்கள் இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: