• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil: போட்டி போட்டு பிரியங்காவை நாமினேட் செய்யும் போட்டியாளர்கள்!

Bigg Boss Tamil: போட்டி போட்டு பிரியங்காவை நாமினேட் செய்யும் போட்டியாளர்கள்!

பிக் பாஸ்

பிக் பாஸ்

போட்டியாளர்கள் தாங்கள் நாமினேட் செய்ய விரும்புபவரின் புகைப்படத்தை நெருப்பில் போட்டுவிட்டு, அதற்கான காரணத்தைக் கூற வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

  • Share this:
    பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 இந்த மாத தொடக்கத்தில் தொடங்கியது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

    இந்நிலையில் நாடியா சங் மற்றும் அபிஷேக் ராஜா இருவரும் அடுத்தடுத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதால், தற்போது 15 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு திங்கட்கிழமையும், பிக் பாஸ் வீட்டில் அந்த வார எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைப்பெறுவது வழக்கம்.

    அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், போட்டியாளர்கள் தாங்கள் நாமினேட் செய்ய விரும்புபவரின் புகைப்படத்தை நெருப்பில் போட்டுவிட்டு, அதற்கான காரணத்தைக் கூற வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


    இதையடுத்து சின்னப்பொண்ணு, பிரியங்கா, இசைவாணி, இமான் அண்ணாச்சி உள்ளிட்டோரை போட்டியாளர்கள் நாமினேட் செய்கிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: