Home /News /entertainment /

பிக் பாஸில் நடக்கும் ட்விஸ்ட் - தாமரையை சிக்க வைக்கும் நிரூப்?

பிக் பாஸில் நடக்கும் ட்விஸ்ட் - தாமரையை சிக்க வைக்கும் நிரூப்?

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

அமீரை தவிர மீதம் உள்ள 6 பேரும் நாமினேஷனில் இருப்பதால் இந்த வாரம் யார் வெளியேறுவார்?

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் வாடி, சின்ன பொண்ணு, பாவ்னி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அமீர் மற்றும் சஞ்சீவ் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் நடைபெற்று அதில் குறைந்த வாக்குகள் எடுப்பவர் வெளியேறுவார். அதன்படி இதுவரை 13 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். தற்போது ராஜு, அமீர், நிரூப், தாமரை, பிரியங்கா, சிபி, பாவ்னி ஆகிய 7 போட்டியாளர்களுடன் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதில் அமீர், டிக்கெட் டு பினாலே டாஸ்கில் வெற்றி பெற்று பைனலிற்கு முன்னேறியுள்ளார்.

    இந்த நிகழ்ச்சியில் நேற்றைய நிகழ்ச்சியில் ஓபன் நாமினேஷன் நடைபெற்றது. நாமினேஷனிற்காக மாலைகள் கொடுக்கப்பட்டு இருவரை தேர்ந்தெடுத்து அணிவிக்குமாறு பிக் பாஸ் அறிவித்தார். இறுதியில் இது கடைசி வாரம் என்பதால் அனைவரும் நாமினேஷனில் இருப்பதாக பிக் பாஸ் அதிரடியாக அறிவித்தார்.

    இதனால் அமீரை தவிர மீதம் உள்ள 6 பேரும் நாமினேஷனில் இருப்பதால் இந்த வாரம் யார் வெளியேறுவார்? என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி கட்டத்தில் சூட்கேஸில் ஒரு பெரிய தொகை வைத்து வீட்டிற்குள் அனுப்பப்படும். தன்னால் வெற்றியாளராக முடியாது என்னும் நபர் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறலாம்.

    இந்த டாஸ்க் இன்று நடைபெறுவது இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் தெரிகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய திருப்பு முனையான இந்த டாஸ்க்கிற்காக இன்று நடிகர் சரத்குமார் சூட்கேசுடன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருகிறார். ஒரு போட்டி என வந்துவிட்டால் வெற்றி, தோல்வி நிச்சயமாக இருக்கும். இதில் ரூ. 3,00,000 உள்ளது. இவ்வளவு தான் இருக்கும் என நீங்கள் நினைக்கலாம், இதற்கு அதிகமாகவும் இருக்கலாம். அது எனக்கே தெரியாது. இதனை எடுத்து கொண்டு நீங்கள் ஒருவர் வீட்டிற்கு செல்லலாம். இந்த போட்டியில் ஒருவர் தான் வெற்றி பெறுவார் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள் என கூறுகிறார்.

    இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், பணத்தை யார் எடுப்பது என்ற பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. சொல்ல முடியாது நான் எடுத்தாலும் கூட எடுத்து விடுவேன் என நிரூப் கூறுகிறார். இப்போது யாரோ ஒருவர் இந்த பணத்தை எடுக்க வேண்டும், இதுவரை வந்ததே அனைவருக்கும் வெற்றி தான் என கூறுகிறார். அதற்கு சிபி, எடுத்துக்கொள் என கூறுகிறார். இதனை தொடர்ந்து தாமரையிடம் பேசும் நிரூப், ஒரு வாரத்திற்கு பின்னர் அனைவரும் வெளியே செல்ல போகிறோம், இந்த ஏழு பேரில் யாரோ ஒருவர் தான் வெற்றி பெற போகிறார் என கூறும் காட்சிகள் உள்ளது.



    ரூ. 3,00,000 பணத்தை யாரும் எடுத்து கொள்ளாத பட்சத்தில் இந்த தொகையை அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளது . ராஜு மற்றும் பிரியங்கா வெற்றி பெற வாய்ப்புகள் இருப்பதால் அவர்கள் இருவரும் இதனை எடுக்க மாட்டார்கள். பாவனி பணத்தை எடுத்து கொண்டு போக மாட்டேன் என ஏற்கெனவே கூறியுள்ளார். இதனால் இன்று சூட்கேஸ் பணத்துடன் யார் வெளியேறுவார் என்று எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இதில் ஒருவரும், இந்த வார இறுதியில் ஒருவரும் வெளியேறும் நிலையில் மீதம் உள்ள 5 போட்டியாளர்கள் பைனலுக்கு செல்வார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil 5

    அடுத்த செய்தி