• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss 5 - இந்த வார தலைவராக போவது யார்? நிரூப் - அபினய் காரசார வாக்குவாதம்!

Bigg Boss 5 - இந்த வார தலைவராக போவது யார்? நிரூப் - அபினய் காரசார வாக்குவாதம்!

நிரூப்

நிரூப்

இன்று திங்கட்கிழமை என்பதால் இந்த வாரத்திற்கான தலைவர் பதவிக்கு டாஸ்க் நடைபெறுவது இன்றைய முதல் ப்ரோமோவில் இடம் பெற்றது.

  • Share this:
    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஐந்தாவது சீசன் 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

    இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு அடுத்தடுத்த வாரங்களில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் அபினய், இசைவாணி, சுருதி, பாவ்னி, சிபி, அக்ஷரா, ஐக்கி மற்றும் நிரூப் ஆகியோர் இருந்தனர். தீபாவளி பண்டிகை மற்றும் நேற்று கமலஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு இந்த வாரம் எலிமினேஷன் இருக்காது என்று பிக் பாஸ் ரசிகர்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள். பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் கூட கடைசி நொடி வரை எலிமினேஷன் இருக்காது என நம்பினார்கள். ஆனால் கமல் வழக்கம்போல எலிமினேஷன் நடக்கும் என கூறிவிட்டார்.

    நிரூப், இசைவாணி, பாவ்னி, மதுமிதா, ஐக்கி, அக்ஷ்ரா, என ஒவ்வொரு போட்டியாளராக காப்பற்றப்பட்ட நிலையில் இறுதியில் சுருதி மற்றும் அபினய் ஆகியோர் இருக்கின்றனர். அதில் சுருதி வெளியேற்றப்படுவதாக கமல் கார்டை காட்டி அறிவித்தார். பின்னர் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் கண்ணீர் மல்க ஸ்ருதியை வழியனுப்பி வைத்தனர். இறுதியாகஸ்ருதி, மதுமிதாவை அழைத்துக்கொண்டு பாத்ரூமுக்கு சென்று தான் வைத்திருக்கும் நாணயத்தை எடுத்து அவருக்கு கொடுத்தார். ஆனால் பிக் பாஸ் நாணயத்துடன் வெளியே வருமாறு அழைக்கவே அதனை மீண்டும் வாங்கி கொண்டு வெளியேறினார். ஒருவேளை நாணயத்தை பயன்படுத்தி மீண்டும் ஸ்ருதி வீட்டிற்குள் வருவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் கமல் அந்த காயினை தற்போது பயன்படுத்த முடியாது, நீங்களே நியாபக சின்னமாக வைத்துக்கொள்ளுங்கள் என கமல், சுருதியிடம் கூறினார். ஒருவேளை இந்த நாணயத்தை பயன்படுத்தி நாமினேஷன் லிஸ்டில் இருந்து தன்னை ஸ்ருதி காப்பாற்றியிருந்தால் அவர் வெளியேறியிருக்க மாட்டார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

    இந்தநிலையில் இன்று திங்கட்கிழமை என்பதால் இந்த வாரத்திற்கான தலைவர் பதவி டாஸ்க் நடைபெறுவது இன்றைய முதல் ப்ரோமோவில் தெரிகிறது. இதில் கடந்த வாரம் நடைபெற்ற "செண்பகமே செண்பகமே" டாஸ்கில் வெற்றி பெற்ற பிரியங்கா, பாவ்னி, நிரூப், அபினய், அக்ஷ்ரா, வருண், மது மட்டுமே பங்கேற்க முடியும். அதன்படி இந்த வார தலைவருக்கான போட்டியில் 7 பொம்மைகள் வைக்கப்பட்டு, கூடவே தலைவருக்கு போட்டியிடுபவர்களின் படங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. யார் தலைவராக வேண்டாம் என நினைக்கிறார்களோ அவர்களின் பொம்மை தலையில் இருக்கும் மண் சட்டியை உடைக்க வேண்டும் என கூறப்படுகிறது. அப்போது, ‘எனக்கு எந்த வாய்ப்பும் இல்லை’ எனவே என்னை தலைவராக்குங்கள் என அக்‌ஷரா கூறுகிறார். இதனை தொடர்ந்து முதலாக வரும் சிபி, சற்றும் யோசிக்கமால் அக்ஷ்ராவின் பொம்மை தலையை அடித்து உடைக்கிறார். இதனை எதிர்ப்பார்க்காத அக்ஷ்ரா இதுகுறித்து வருணிடம் கூறி அழும் காட்சிகள் உள்ளது.

    https://twitter.com/vijaytelevision/status/1457596312447172609?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1457596312447172609%7Ctwgr%5Ehb_0_7%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fpublish.twitter.com%2F%3Fquery%3Dhttps3A2F2Ftwitter.com2Fvijaytelevision2Fstatus2F1457596312447172609widget%3DTweet

    இதனிடையே தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், தலைவர் போட்டியில், ராஜு - நிரூப் பொம்மையை உடைப்பது தெரிகிறது. இதனை தொடந்து நிரூப் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது இங்கு வந்தது உன் கேமை விளையாட தானே? 13 பேரை நல்லவர்களாக காட்டி நீ பேர் வாங்குகிறாய் அது சுயநலம் தானே என்கிறார். இது யாரை பார்த்து கேட்கிறார் என்று தெரியவில்லை, ஆனால் பிரியங்கா நீ உன் கருத்தை கூறு மற்றவர்கள் கருத்து குறித்து நீ ஏன் பேசுகிறாய்? அனைத்து இடத்திலும் நான் பேசியது குறித்து மட்டுமே நீ கமெண்ட் செய்தால் உன் கருத்து எதுவும் இல்லாமல் போய்விடும் என்கிறார். இதனை தொடர்ந்து சமையலறையில் இருக்கும் அபினய், அவன் எப்போதும் அப்படி தான் , மற்றவர்கள் கருத்து குறித்து பேசுவான், சொந்தமாக எதுவும் கூற மாட்டான் என கூறிக்கொண்டிருக்க அங்கு வரும் நிரூப், மற்றவர்கள் கருத்தை நான் எப்போது பேசினேன்? என கோபமாக கேட்கும் காட்சிகள் உள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: